தனியார் பள்ளிகளுக்கு கடைசி வாய்ப்பு.....
பள்ளி நிர்வாகிகள் கவனத்திற்கு டிடிசிபி பழைய பள்ளி கட்டிடங்களுக்கு அனுமதி கோரி விண்ணப் பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பியுங்கள் ...
ஏப்ரல் மாதம் நான்காம் தேதி கடைசி நாள்.
இதுவே கடைசி வாய்ப்பு.
நகராட்சி மாநகராட்சி எல்லைக்குள் உள்ள பள்ளி நிர்வாகிகள் விண்ணப்பிக்க முடியாது.....
அதுவெல்லாம் திட்டமிட்ட பகுதி பிளானிங் ஏரியா.
நான் பிளானிங் ஏரியா என்பது கிராம ஊராட்சி பேரூராட்சி எல்லைகள் மட்டுமே.
எனவே கிராமப்புற பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளும் உடனடியாக இருக்கிற இடத்தில இருக்கிற கட்டிடங்களுக்கு இருக்கிற படியே உங்கள் பள்ளிகளுக்கான கட்டிட அனுமதியை பெற்றுக் கொள்ளலாம்.
உங்கள் பள்ளி நிலம் 2011 க்கு முன் வாங்கப்பட்டு இருக்க வேண்டும். அதற்கான ஏதாவது ஒரு அரசு சான்று இருந்தால் போதுமானது. பள்ளி கட்டிடத்தின் உடைய ப்ளூ பிரிண்ட் பட்டா சிட்டா அடங்கல் எப்.எம். பி ஸ்கேட்ச் பில்டிங் லைசன்ஸ் சானிட்டரி சர்டிபிகேட் பையர் என்.ஓ.சி கல்வித்துறையின் அங்கீகாரம் இதில் ஏதாவது ஒன்று இருந்தால் கூட போதுமானது...
ஒரு சதுர அடிக்கு ரூபாயை 7 ரூபாய் 50 பைசா மட்டும் கட்டினால் போதுமானது. இருக்கிற கட்டிடத்திற்கு இருக்கிற மாதிரியே கட்டிட அனுமதி கிடைத்துவிடும்.
இல்லையென்றால் இந்த ஜென்மத்திற்கு கட்டிட அனுமதி டிடிசிபி வாங்க முடியாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். பின்னர் பள்ளி நடத்துவது பெரும் கேள்விக்குறி ஆகிவிடும்.
எனவே இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த வாய்ப்பு நகராட்சி மாநகராட்சி பள்ளிகளுக்கு கிடையாது.
ரூபாய் 160 பிளஸ் கட்டித்தான் விதிப்படி இருந்தால் மட்டும்தான் அவர்கள் டிடிசிபி. அனுமதி பெறமுடியும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மறந்துவிடாமல் பெரியபள்ளி சிறிய பள்ளி எனக்கு எல்லாம் தெரியும் என்று இருந்து ஏமாந்து பின்னர் வருத்தப்பட வேண்டாம்.
இப்பொழுதாவது இந்த சங்கத்தில் உறுப்பினராகி உரிய உதவிகள் பெற்று பயன் அடையுங்கள். நன்றி....
அன்புடன்
நந்தகுமார்.