திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் வெளியேறுகிறதா....?

திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் வெளியேறுகிறதா....?

தேர்தல் தொடர்பாக இன்னும் முடிவெடுக்கவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியிருப்பது திமுக கூட்டணிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைமை எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் பேசியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

ஆலோசனைக் கூட்டம்

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டிருக்கிறார்கள் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது பற்றி ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து நிர்வாகிகளும் விரிவாக பேசியுள்ளார்கள். இறுதியாக தொல்.திருமாவளவன் பேசுகையில்தான் உறுதியாக சில தகவல்களை தெரிவித்தார்.

நிதி முக்கியம்

தேர்தல் நிதி தேர்தல் வெற்றிக்கு ரொம்ப அவசியமாக இருக்கிறது. தேர்தல் கூட்டணி பற்றி இன்னமும் முடிவு எட்டப்படாத நிலையில் இருக்கிறது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தான் நாம் பயணம் செய்துகொண்டே இருக்கிறோம். தலைமை எடுக்கும் முடிவுக்கு இந்த கூட்டம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொகுதி பங்கீடு

ஏற்கனவே திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடையே, ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. இன்று இரவு மீண்டும் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் திருமாவளவன் இவ்வாறு பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

15 தொகுதிகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொறுத்த அளவில் திமுகவிடம் 15 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டுள்ளது. ஆனால் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் தொகுதி வழங்கப்படும் என்று திமுக பேச்சுவார்த்தை குழு தெரிவித்துள்ளது. இதனால் இவ்விரு கட்சிகளுக்கும் இடையே இழுபறி நிலை நீடித்து வருகிறது.

விடுதலை சிறுத்தைகள் பாதை

அதேநேரம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பாஜக மற்றும் பாமக இருக்கக்கூடிய அதிமுக கூட்டணிக்கு செல்லாது. எனவே, திமுக கூட்டணியை விட்டால் மூன்றாவது அணி அல்லது கமல்ஹாசன் கட்சியை போன்றவற்றுடன்தான் விடுதலை சிறுத்தைகள் செல்ல முடியும். அதற்கு வாய்ப்பு ரொம்ப கம்மி என்று கூறப்பட்டது. ஆனால் திருமாவளவனின் இந்த பேச்சு திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமாவளவன் தன் கட்சி தொண்டர்கள் இடம் என்னதான் வீராவேசமாக பேசினாலும் அவர் ஸ்டாலின் விட்டு வெளியே வரமாட்டார். 

அவர் கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக் கொள்வார் ஏனென்றால் விடுதலை சிறுத்தைகள் திமுகவின் அடிமை கட்சி ஆயிற்று என்றும் பேசுகிறார்கள்