போலீஸ்க்கு பணம் ; கே என் நேரு மீது சிபிஐ விசாரணை

போலீஸ்க்கு பணம் ; கே என் நேரு மீது சிபிஐ விசாரணை

திருச்சியில் தபால் ஓட்டுகள் பெறப்பட்டபோது மாவட்ட போலீசார்பலருக்கு ரூ. 2 ஆயிரம் வீதம் திமுகமுன்னாள் அமைச்சர் கேஎன் நேரு பணம் கொடுத்தார் என் ஆதாரத்தோடு குற்றச்சாட்டு எழுந்தது.


போலீசுக்கு பணம், திருச்சி நேரு கதை முடிந்தது: சிபிஐ விசாரணை!
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக தில்லைநகர் போலீசார், அரசு மருத்துவமனை போலீசார் சிலர் பணம் பெற்ற லஞ்ச கவர்களோடு கையும் களவுமாகச் சிக்கினர்.

இந்த சூழலில் சம்பந்தப்பட்ட போலீசாரை மாவட்ட கமிஷ்னர் பணியிட நீக்கம் செய்து உத்தரவிட்டார். அதேபோல் குறிப்பிட்ட போலீசார் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. 



இந்த விவகாரத்தில் தெளிவாகத் தனது பெயரோடு குற்ற வழக்குப் பதிவானதையடுத்து கேஎன் நேரு தான் அப்படி எதுவும் செய்யவில்லை என அறிக்கை வெளியிட்டார். இதையே ஒரு கடிதமாக மாவட்ட கமிஷ்னருக்கும் அனுப்பி வைத்தார்.

தமிழ்நாட்டு அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்த இந்த விவகாரம் மக்கள் பலரின் கவனத்தைப் பெற்றிருந்தது. இந்த சூழலில் போலீசாருக்கு லஞ்சம் வழங்கியதாக திமுக திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் கேஎன் நேரு மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாக சிபிஐ விசாரிக்கத் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது
Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்