வாரிசு அரசியலை வேரறுத்து அதிமுக....!

வாரிசு அரசியலை வேரறுத்து அதிமுக....!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ஜெயபிரதீப். அதிமுக சார்பில் போட்டியிட வேண்டும் என்று விருப்ப மனு அளிக்கப்பட்டிருந்தது. கௌத்தூர், கம்பம், ஆண்டிப்பட்டி ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் ஜெயபிரதீப் போட்டியிட வாய்ப்பு அளிக்குமாறு சிலர் விருப்ப மனு அளித்திருந்தனர்.

இந்தநிலையில் கடந்த வாரம் அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. இதில் ஆறு பேர் கொண்ட பட்டியல் மட்டுமே இருந்தது. இந்தநிலையில் நேற்று (10.03.2021) அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதில் ஓ.பன்னீர்செல்வம் மகன் ஜெயபிரதீப் பெயர் இடம்பெறவில்லை.

கம்பம் தொகுதியில் அவருக்குப் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர். இந்தநிலையில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. வாய்ப்பு கிடைக்கவில்லை என்றதும் அவர் என்ன செய்கிறார் என்று விசாரித்தோம்.

போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற வருத்தமோ, கவலையோ அவரிடம் இல்லை. தனது தந்தை போட்டியிடும் போடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுகவின் அனைத்து களப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். வாக்காளர் விவரங்களைத் தனது நுனி விரலில் வைத்துள்ள ஜெயபிரதீப், எந்த இடத்திலாவது தனது தந்தைக்கு அதிருப்தி ஏற்பட்டால், அந்த அதிருப்தியாளர்களை நேரில் சென்று சந்தித்து அதனை சரி செய்வதோடு, மேலும் அவர்களது கோரிக்கை என்ன என்று குறித்து வைத்துக்கொண்டு, உடனே நிறைவேற்றி வருகிறார் .

இதேபோல் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே பி முனுசாமியின் மகன் சதீஷ்குமார் கிருஷ்ணகிரியில் போட்டியிடுவதாக வதந்திகள் பரப்பப்பட்டு வந்தது. இன்னும் சில மாவட்டங்களில் அமைச்சர்கள் வீட்டு பிள்ளைகள் களம் காணுவார்கள் என்றும் சொல்லப்பட்டது 

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எந்த வாரிசுகளுக்கும் அதிமுகவில் இந்த முறை இடம் அளிக்கப்படவில்லை கட்சியில் இருக்கின்ற அனைவரும் சீட் கேட்கும் உரிமை அனைவருக்கும் உள்ளது அந்த முறையில்தான் கட்சி உறுப்பினர்களாக அவர்கள் விண்ணப்பித்தார்கள் அதை ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் தலைமையின் முடிவு இதற்கு அனைவரும் கட்டுப்பட்டு செயல்பட்டு வருகிறார்கள் இதுதான் அதிமுகவின் ஒற்றுமை பலம்.

அதுமட்டுமல்ல இந்த கட்சியில் யாரும் யாரையும் தனக்கு கண்டிப்பாக சீட் கொடுத்தாக வேண்டும் என்று. மிரட்ட முடியாது.  இந்த கொள்கைகள்தான் எத்தனை சோதனைகள் வந்தாலும் அதிமுகவை விழாமல் பாதுகாத்து வருகிறது என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்