அரசு விதிமுறைகளை மீறி செயல்படும் அரசு பள்ளிகள்
COVID-19 காலத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை இன்னும் பள்ளி திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கவில்லை. ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களை வரவழைத்து பாடம் நடத்தும் படி ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் குறுவள மைய தலைமை ஆசிரியர்களும் மாணவர்களை வரவழைத்து பாடம் நடத்த வற்புறுத்துகிறார்கள். அவ்வாறு நடக்கிறதா என்று இவர்கள் தினமும் பள்ளி பார்வைக்குச் செல்கின்றார்கள். அவர்கள் செல்லும் நேரத்தில் மாணவர்கள் இல்லை என்றால் ஆசிரியர்களை திட்டுகிறார்கள். மேலும் தினமும் ஏதாவது 2 மற்றும் 3 பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களின் வாசிப்புத் திறனை சோதிக்கிறார்கள். இது சூளகிரி ஒன்றியத்தில் தொடர்கதையாக இருந்து வருகிறது.