2021 சட்டமன்றத் தேர்தலில் சசிகலா யாருடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு?
சிறையில் இருந்து வெளியே வந்துள்ள சசிகலா, அதிமுகவைக் கைப்பற்றுவாரா? அல்லது அமமுகவின் தலைவியாக தொடர்வாரா? வருகிற சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பார் என்ற கேள்விகளும் விவாதங்களும் எழுந்துள்ளன.
நான்கு ஆண்டு சிறை தண்டனை முடித்து பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பும் சசிகலாவுக்கு வழிநெடுக அமமுகவினருக்கு உற்சாக வரவேற்பு அளித்துவருகின்றனர். சிறையில் வெளியே வந்துள்ள சசிகலா அதிமுகவைக் கைப்பற்றுவாரா? இரட்டை இலை சின்னத்தை பெறுவரா? அல்லது அமமுக தலைவியாக தொடர்ந்து அக்கட்சியை நடத்துவரா? வருகிற சட்டமன்றத் தேர்தலில் சசிகலா யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற கேள்விகளும் விவாதங்களும் எழுந்துள்ளன.
டிசம்பர் 5, 2016ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு, ஏற்கெனவே ஜெயலலிதா பதவியில் இருந்து விலகியபோது, பதவியேற்ற ஓ.பன்னீர் செல்வம் சில மாதங்கள் முதல்வராக இருந்த நிலையில் ராஜினாமா செய்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். 2017ல் அதிமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.
சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க இருந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி தர்ம யுத்தம் நடத்தினார். இதையடுத்து, அதிமுக ஓ.பி.எஸ் அணி சசிகலா அணி என்று பிரிந்தது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை, 10 கோடி ரூபாய் அபராதம் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தததால் சசிகலாவின் முதல்வர் கனவு தகர்ந்தது. கூவத்தூர் சம்பவத்துக்குப் தனது ஆதரவாளரான எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தேர்வு செய்துவிட்டு சிறை சென்றார்.
சசிகலா சிறை சென்ற பிறகு, ஓ.பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து அதிமுகவைக் கைப்பற்றினார்கள். அவர்கள் சசிகலாவையும் அவருடைய சகோதரி மகன் டிடிவி தினகரனையும் அதிமுகவில் இருந்து நீக்கினார்கள். இதனால், அதிமுக ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் ஒரு அணியாகவும் சசிகலா – டிடிவி தினகரன் ஒரு அணியாகவும் பிரிந்தது. ஜெயலலிதா வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தேர்தலில் இருதரப்பும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை கோரியதால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அதனால், டிடிவி தினகரன் ஆர்.கே.நகரில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார்.
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் அதிமுக கட்சியினரின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அணி அதிமுகவை இரட்டை இலை சின்னத்தையும் பெற்றது.
அதற்குப் பிறகு, தனக்கு ஒரு அரசியல் கட்சி தேவை என்பதால் டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். பின்னர், 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அமமுக 8 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது.
இந்த நிலையில், சசிகலா 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து விடுதலையாகி சென்னை திரும்புகிறார். அவருக்கு வழிநெடுக அமமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்து னர்.
சிறையில் இருந்து வெளியே வந்துள்ள சசிகலா, அதிமுகவைக் கைப்பற்றுவாரா? அல்லது அமமுகவின் தலைவியாக தொடர்வாரா? வருகிற சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பார் என்ற கேள்விகளும் விவாதங்களும் எழுந்துள்ளன.
அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சசிகலா விடுதலையான நாளில் அவருக்கு வெளிப்படையாக வாழ்த்து தெரிவித்தார். அதற்கு முன்னதாக, சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் மாற்றம் ஏற்படலாம் என்று பேசினார்.
இதனிடையே, அதிமுக அமைச்சர்கள், ஏற்கெனவே கூட்டணியில் உள்ள பாமகவை வருகிற சட்டமன்றத் தேர்தலிலிலும் அதிமுக கூட்டணியில் இருப்பதை உறுதி செய்ய பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினார்கள். பாமகவின் கோரிக்கையான வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு கோரிக்கையையும் ஒப்புக்கொண்டதாக வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆனால், அதிமுக தங்கள் கூட்டணியில் உள்ள தேமுதிகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தையை நடத்துவதில் ஆர்வம் காட்டவில்லைன். நேற்று முன் தினம், தெமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய பிரேமலதா எனக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை கூட்டணி என்று விஜயகாந்த்தின் தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்பு என்ற ஸ்டைலில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதனால், அமமுக வருகிற சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் கூறுகின்றன.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை கூட்டணியில் சேர காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்தார். ஆனால், கமல்ஹாசன் இதுவரை எதுவும் பதில் கூறவில்லை.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம், ஆகிய கட்சிகள் தொடர்ந்து அப்படியே நீடிக்கும் என்பதால் திமுக கூட்டணியில் மேலும் சில சிறிய கட்சிகள் சேரலாமே தவிர பிரிய வாய்ப்பில்லை என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக கூட்டணியில் இருந்து விஜயகாந்த்தின் தேமுதிக வெளியேறினால், சசிகலா தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக சிலர் கருதினாலும் அது நடக்காது என்றே தெரிகிறது.
வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.