மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட அவசர ஆலோசனைக் கூட்டம்

மெட்ரிகுலேஷன்  பள்ளிகள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட  அவசர ஆலோசனைக் கூட்டம்



 திருவள்ளூர் மாவட்ட நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகிகள் அனைவரையும் அன்போடு இருகரம் கூப்பி அழைக்கின்றோம்.

09.02.2021 நாளை காலை சரியாக 10.30. மணி  அளவில் திருவள்ளூர் பஸ் நிலையம் எதிரில் உள்ள சாய் கே. எஸ். மினி ஹாலில் நமது தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் மிக முக்கியமான அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

 இக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முனைவர். என். ராஜன் அவர்கள் தலைமை ஏற்க மாவட்ட செயலாளர் முனைவர் . என். மணிவண்ணன் முன்னிலை வகிக்க அருள்தாஸ் வரவேற்புரை ஆற்ற மாநிலத் தலைவர் பேராசிரியர். ஏ.கனகராஜ் அவர்கள்

மாநில பொதுச் செயலாளர். கே. ஆர். நந்தகுமார் அவர்கள் சிறப்புரையாற்ற தனியார் பள்ளிகளுக்கான அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிட மிக முக்கியமான முடிவுகளை எடுத்திட அனைத்து பள்ளி நிர்வாகிகள் தவறாமல் நேரில் வந்து தங்கள் மேலான கருத்துக்களை சொல்லி சங்கத்திற்கு வலுவூட்ட வேண்டுமாய் அன்போடு இரு கரம் கூப்பி அழைக்கின்றேன்.

 உங்கள் அனைவருக்கும் இந்த புத்தாண்டின் பரிசுகளும் விருதுகளும் வழங்க காத்திருக்கிறோம்.

 அனைவரும் தவறாது நேரில் வந்து சிறப்பிக்க வேண்டுமாய் அன்போடு இருகரம் கூப்பி அழைக்கின்றோம்.

 நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்திட.....

டிடிசிபி பிரச்சனையை தீர்த்து ஐந்தாண்டுக்கு ஒரு முறை அங்கீகாரம் நிரந்தர அங்கீகாரம் அனைவருக்கும் கிடைக்க செய்திட....

 தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக் குழு தற்போது பழைய கல்வி கட்டணம் 50 சதவீதம் குறைத்து ஆணையிடுவதை தடுத்து நிறுத்தி அனைவருக்கும் நியாயமான கல்வி கட்டணம் கிடைத்திட....

தனியார் பள்ளி வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் சாலை வரி எப்.சி பிரச்சனையை தீர்த்து  சாலை வரிக்கு நூறு சதவீதம் அபராதம் போடுவதை கைவிட செய்திட......

உடனே அனைத்து வகுப்புகளையும் திறந்து பள்ளிகளை நடத்திட நாம் உடனடியாக இணைந்து பணியாற்றிட வேண்டும்....

அதற்காக வாருங்கள் திட்டமிடுவோம் செயல்படுத்துவோம்.

அதற்கு மாநில சங்கம் வலுவாக இருக்க வேண்டும் அனைத்து பள்ளி நிர்வாகிகளை ஒருமுகப்படுத்தி நமது ஒற்றுமையை மேம்படுத்தி இந்த அரசின் கடைசி காலத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நமது நியாயமான கோரிக்கைகளை வெற்றி காண்போம் வாருங்கள் என்று அன்போடு அழைக்கின்றோம்.

என்றும் தனியார் பள்ளிகளின் நலம் நாடும் உங்கள்

 கே. ஆர். நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர்.