முரசு சின்னத்தில் போட்டியிடுவோம் தேமுதிக துணைச் செயலாளர் பார்த்தசாரதி பேட்டி.

முரசு சின்னத்தில்  போட்டியிடுவோம் தேமுதிக  துணைச் செயலாளர் பார்த்தசாரதி பேட்டி.....



பெருந்துறை வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனைக மற்றும் பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக கழக துணைச் செயலாளர் பார்த்தசாரதி, தேர்தல் பணிக்குழு செயலாளர் சிவகங்கை சந்துரு கலந்துகொண்டு  தேர்தல் பணிகள் குறித்தும் வேட்பாளர்கள் நியமனம் குறித்தும் ஆலோசனை செய்தனர்.

 அப்போது பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த துணைச் செயலாளர் பார்த்தசாரதி தேமுதிக அங்கீகரிக்கப்பட்ட கட்சி   வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் முரசு சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என கூறினார் .மேலும் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு நல்ல  வரவேற்பு இருப்பதாகவும், சசிகலாவின் வருகை குறித்து எழுப்பிய கேள்விக்கு தேமுதிகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறினார்.

தேமுதிகவின் தேர்தல் வாக்குறுதிகள் மக்களிடம் சென்று சேரும் போது தேமுதிகவின் வெற்றி வாய்ப்பு அமோகமாக இருக்கும் என கூறினார்.  தெற்கு மாவட்ட கழக செயலாளர் முருகன் தலைமையில் நடந்த  கூட்டத்தில் பேரூர் கழக செயலாளர் சண்முகம் வரவேற்புரையாற்றினார் , 

மாவட்டக் கழக துணைச் செயலாளர்கள் முருகானந்தம், லாவண்யா முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மற்றும் வனிதா துறை மாநில மகளிர் அணி துணைச் செயலாளர், கிரண்  பிரசாத் மாவட்ட நிர்வாகி, சக்திவேல் பவானி நகர செயலாளர், லோகு பவானி ஒன்றிய கழகச் செயலாளர், கணேஷ்  பெருந்துறை பொறுப்பாளர் ,பழனிச்சாமி ஆப்பக்கூடல், பிரபாகரன் ஜம்பை, மாசிலாமணி மொடக்குறிச்சி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்

 Yogeshwari Erode: