புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம்

 புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம்   புற்று நோய்க்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை பொதுமக்களிடையே ஈரோடு கேன்சர் சென்டர் மற்றும் மாற்றத்திற்கான விதைகள் எனும்  சமூக சேவை அமைப்பினர் இணைந்து நடத்தினர்.

          புற்றுநோய் என்றாலே பொதுமக்களிடையே அச்சமும் கலவரமும் ஏற்படும் வகையில்  நோயின் பாதிப்பு உள்ளது. ஆங்கிலம் மற்றும் தமிழ் மருத்துவத்தில் பல்வேறு நோய்களுக்கான மருந்தை கண்டுபிடித்தாலும் இன்னமும் புற்று நோயை முழுவதுமாக குணமடைய செய்யும் மருந்து எந்த மருத்துவத்திலும் கண்டுபிடிக்கவில்லை என பொதுமக்கள் இடையே ஒரு கருத்து பரவலாக இருந்து வருகிறது   மேலும் இந்த நோய் பாதிக்கப்பட்டால் அதிக பணம் செலவழித்தால் மட்டுமே குணமாகும் என மக்கள் நினைத்துக் கொண்டு சரியான மருத்துவத்தை எடுக்காமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  

ஒரு மனிதருக்கு  புற்று நோயின் ஆரம்ப நிலையிலேயே நோயை கண்டு பிடித்தால் அவரை காப்பாற்றி விடலாம் ,மற்றும் நோயின் தீவிரத்தை பொறுத்து   மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால் புற்று நோயிலிருந்து விடுபடலாம் என கூறினார். மேலும் ஈரோடு கேன்சர்  சென்டரில் அஜீரணம், தொண்டை கரகரப்பு, பசியின்மை, மாதவிலக்கு தொந்தரவு கள் போன்ற அறிகுறிகள் இருந்தால்   பொது மக்களுக்கு ஒரு நாள் இலவச பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த சேவையை மாற்றத்திற்கான விதைகள் அமைப்பினர் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் மூலம் கொண்டு சேர்த்தனர்.

Yogeshwari, Erode