திமுக போட்ட பிச்சையில் தான் எல்லோரும் நீதிபதிகள் ஆனார்களா நீதிமன்றம் கேள்வி....?

திமுக போட்ட பிச்சையில் தான் எல்லோரும் நீதிபதிகள் ஆனார்களா நீதிமன்றம் கேள்வி....?

வன்கொடுமை சட்டத்தின் கீழ் தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி தி. மு.க அமைப்பு செயலாளர் ஆர். எஸ் பாரதி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது. திராவிட இயக்கம் இல்லாவிடில் நீதிபதிகள் சுயமாக முன்னேறி இருக்க முடியாதா என்றும் திராவிட இயக்கத்தின் பிச்சையில் தான் எல்லோரும் நீதிபதி ஆனார்களா எனவும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த கருத்தரங்கு ஒன்றில், பட்டியல் இனத்தவர்கள் குறித்து கருத்து தெரிவித்ததாகக் கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி எதிராக, ஆதி தமிழர் மக்கள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Chennai High Court adjourns judgment in R S Bharathi case

சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டதை அடுத்து, கடந்த மே மாதம் ஆர்எஸ் பாரதி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

சென்னையில் உள்ள எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர் எஸ் பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், தான் முதல்வர் மற்றும் தமிழக அமைச்சர்களுக்கு எதிராக புகார் அளித்து வருவதால், அதற்கு பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

அரசியல் உள்நோக்கத்தோடு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதால், இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார். தன் மீதான வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ் பாரதி தாக்கல் செய்த வழக்கு இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆர்.எஸ் பாரதி தரப்பில்,திராவிட இயக்கத்தின் சிறப்புகளை பட்டயலிடவே அவ்வாறு பேசியதாகவும், நீதிபதிகள் நியமனத்தை பற்றி மட்டுமல்லாது மற்ற துறைகளை பற்றியும் பேசியிருந்ததாகவும் தெரிவித்தார். ஆனால் நீதிபதிகள் நியமனம் குறித்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், நீதிபதிகளை அவமதிக்கும் நோக்கத்தோடு பேசப்படவில்லை எனவும் தெரிவித்தார்.(அந்தர் பல்டி அடித்து விட்டார்)

அதற்கு நீதிபதி சதீஷ்குமார், திராவிட இயக்கம் இல்லாவிடில் நீதிபதிகள் சுயமாக முன்னேறி இருக்க முடியாதா என்றும் திராவிட இயக்கத்தின் பிச்சையில் தான் எல்லோரும் நீதிபதி ஆனார்களா என கேள்வி எழுப்பினார். சமீப காலங்களாக அரசியலில் அறிவுப்பூர்வமான கருத்து பரிமாற்றம் குறைந்து வருவதாகவும் வருத்தம் தெரிவித்தார்.

காவல்துறை தரப்பில், ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு ஒட்டுமொத்தமாக பட்டியலின சமுதாய மக்களிடையே வெறுப்புணர்வையும், பகையுணர்வையும் ஏற்படுத்தியுள்ளதாக வாதிடப்பட்டது. ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு தொடர்பான வீடியோ ஆதாரங்கள் மற்றும் அவருக்கு எதிராக சாட்சிகள் உள்ளதால் அவர் வழக்கை எதிர்கொண்டு தான் ஆக வேண்டுமென வாதிட்டார். இந்த வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார்.