9, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள்

9, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள் பள்ளிகளில் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு 40 லட்சம் வைட்டமின் மாத்திரைகள் நாளை முதல் வழங்கப்படுமென பள்ளிக் கல்வித் துறை கூறியுள்ளது.

ஏற்கனவே 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை 10 மற்றும் வைட்டமின் மாத்திரை 10 வழங்கப்பட்டன.

அதேபோல 9, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 40 லட்சம் மாத்திரைகள் வழங்கப்படும் என்றும், 19 லட்சம் மாணவர்களுக்கு நாளை முதல் மாத்திரைகள் வழங்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.