ஈரோட்டில்: பா.ஜ.க.வின் விவசாய விழிப்புணர்வு கூட்டம்.

 ஈரோட்டில்:  பா.ஜ.க.வின் விவசாய விழிப்புணர்வு கூட்டம். ஈரோடு வீரப்பன்சத்திரம் பா.ஜ.க.வின் அலுவலகத்தில் விவசாய வேளாண் மசோதா சட்டம் குறித்து விழிப்புணர்வு  கூட்டம் நடைபெற்றது. சமீபகாலமாக எதிர்க்கட்சிகள் முதல் பல சங்கங்கள் வரை விவசாய வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து பல ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும்  நடத்தி வருகிறது. இவை அனைத்தும் விவசாய வேளாண் சட்ட மசோதாவின் புரிதல் இன்மை என பா.ஜ.க.வின் முக்கிய நிர்வாகிகள் கூறினர். மேலும் இந்த கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு கட்சிப் பணிகள் குறித்தும் தேர்தல் வேலைகள் குறித்தும்   ஆலோசனைகள் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எஸ். ஏ. சிவசுப்பிரமணியன்(District president), குணசேகர் மாவட்ட பொதுச்செயலாளர், விவேகானந்தர் மாவட்ட பொதுச்செயலாளர், சக்தி சுப்பிரமணியம் மாவட்ட அரசு தொடர்பு மற்றும் மாவட்ட தலைவர், பிரிமியர் பாலு மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர், விஸ்வ பாலாஜி மாவட்ட செயலாளர் ,சிவகாமி மாவட்ட செயலாளர் மற்றும் சிறப்பு விருந்தினராக "நாராயண திருப்பதி" மாநில செய்தி தொடர்பாளர் மற்றும் பா ஜ.க. தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

 Yogeshwari, Erode