எடப்பாடி பழனிசாமி = விஜய் சந்திப்பு ரகசியம்

 எடப்பாடி பழனிசாமி = விஜய்  சந்திப்பு  ரகசியம்

 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர்  படம் வரும் 13ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. கொரோனா வைரஸ் பிரச்சனைக்கு பிறகு தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் விஜய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த அனுமதி கோரினார். ஆனால் நேற்று முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இருப்பினும் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மாஸ்டர் படம் திட்டமிட்டபடி ரிலீஸாகுமா, அப்படி வெளியானாலும் வசூல் பாதிக்கப்படுமே என்று பேச்சு கிளம்பியுள்ளது. ஆனால் படம் திட்டமிட்டபடி 13ம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பு இன்று உறுதி செய்துள்ளது.
இந்நிலையில் விஜய் தன்னை சந்தித்தது குறித்து எடப்பாடி பழனிசாமி கூறியதாவது,

விஜய் என்னிடம் மாஸ்டர் படம் பற்றி மட்டும் பேசவில்லை. மொத்த தமிழ் திரையுலகிற்கும் உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். மேலும் இந்த பான்டமிக் நேரத்தில் தமிழ் திரையுலகம் சந்தித்து வரும் நிதி நெருக்கடி பற்றியும் பேசினார் என்றார்.

100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த அனுமதி கிடைக்கும், மாஸ்டரை வெளியிட்டு பெரிய அளவில் வசூல் பார்க்கலாம் என்று தியேட்டர் உரிமையாளர்களும் நினைத்தார்கள். இந்நிலையில் விஜய்யின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

மாஸ்டர் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளில் ரிலீஸாக உள்ளது. படத்திற்கு யு/ஏ சான்று கிடைத்துள்ளது. விஜய்யின் கெரியரில் இது வித்தியாசமான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.