கமலஹாசனுக்கு அரசியலில் தகுதி கிடையாது : அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.பி

கமலஹாசனுக்கு அரசியலில் தகுதி கிடையாது : அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.பிஒசூர் அருகேயுள்ள உத்தனப்பள்ளி மற்றும் அகரம் முருகன் கோவில் ஆகிய இடங்களில் அதிமுக கட்சி சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

தற்போது கமல்ஹாசன் கூட அரசியலுக்கு வந்துள்ளார். அவர் பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்கிறார். அதனை நினைத்தால் சிரிப்பு வருகிறது. கமல்ஹாசன், கருணாநிதி ஆட்சியை கொண்டு வருவோம் என்று சொல்லவேவில்லை,

அப்படி என்றால் கருணாநிதி எவ்வளவு மோசமான ஆட்சியை செய்துள்ளார்? அந்த கருணாநிதியின் மகன் நம்மை எதிர்த்து நிற்கிறார். எனவே அவர் நமக்கு தேவையில்லை. கமலஹாசனின் கூற்றுப்படியும் அவர் தேவையில்லை.

எம்.ஜி.ஆர் ஆட்சி வேண்டும் என்றால் நாம் தான் வரவேண்டும்.

கமலஹாசனுக்கு அரசியலில் தகுதி கிடையாது. அவர் தனிமனித வாழ்வில் ஒழுக்கம் இல்லாதவர். தனிமனித வாழ்க்கையில் ஒழுக்கம் இல்லாத ஒரு மனிதன் பொது வாழ்க்கையில் எப்படி ஒழுக்கமாக இருக்க முடியும்?

இவ்வாறு அவர் பேசினார்