தேவேந்திரகுல தோர் கண்டன போராட்டம்.

 ஈரோடு:  ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்ற அரசாணையை உடனடியாக அறிவிக்க வலியுறுத்தி தேவேந்திரகுல தோர் கண்டன  போராட்டம்.
  ஈரோடு வீரப்பன்சத்திரம் தேவேந்திர குலத்தான், பள்ளன், பண்ணாடி ,காலாடி, குடும்ப, வாதிரையான், கடையன், ஆகிய 7 பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்ற அரசாணையை உடனடியாக அறிவிக்க வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தேவேந்திர குலத்தவர் கருப்புச் சட்டையில் மாபெரும் கண்டன போராட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் செல்வராஜ், மாவட்ட செயலாளர் மயில் துறையின், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் சத்யா, மாவட்ட தொழிற்சங்க செயலாளர் குமார்,  மாணவரணி செயலாளர் குணா, மாவட்ட இளைஞரணி செயலாளர் குமார், பவானி ஒன்றிய செயலாளர் சோமு, மகளிரணி நிர்வாகிகள் அன்னக்கொடி, காஞ்சனா, மயிலா, உள்ளிட்டோரும் மற்றும்  முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.