சித்ராவின் 'கால்ஸ்' முதல் படமே கடைசி படமான சோகம்

சித்ராவின் 'கால்ஸ்'  முதல் படமே கடைசி படமான சோகம் 

முதல் படமே கடைசி படமான சோகம்

வெள்ளித்திரையில் தன்னைக் காண வேண்டும் என்ற நடிகை சித்ராவின் கனவு அவர் இறந்த பின் நனவாகியுள்ளது.

தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமாகி படிப்படியாக வளர்ந்து சின்னத்திரையில் நாயகியாக வளர்ந்தவர் சித்ரா.

இயக்குநர் ஜெ. சபரிஸ் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் சித்ராவுடன் டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, ஆர்.சுந்தர்ராஜன், தேவதர்ஷினி, வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி, ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இன்ஃபினிட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இத்திரைப்படத்துக்கும் தமீம் அன்சாரி இசையமைத்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜுலை மாதம் தொடங்கிய இந்தப் படம் தஞ்சாவூர், திருச்சி, சென்னை, வாரணாசி உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டு 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது..