தமிழ்நாடு கிராம வங்கியின் பஞ்சப்பள்ளி கிளை புதிய கட்டிட திறப்பு விழா

 தமிழ்நாடு கிராம வங்கியின் பஞ்சப்பள்ளி கிளை புதிய கட்டிட திறப்பு விழாதமிழ்நாடு கிராம வங்கியின் தலைவர் திரு எஸ். செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் புதிய கட்டிடத்தை மக்களாட்சி பத்திரிக்கை ஆசிரியரும் நியூ ஜெனரேஷன் மெட்ரிகுலேஷன் பள்ளியின் நிர்வாகி K.R. ரவிச்சந்திரன் திறந்துவைத்தார்

வங்கியின் பாதுகாப்பு பெட்டக அறையை பஞ்சப்பள்ளி ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் திரு பா.கி. பட்டாபிராமன் திறந்து வைத்தார்.தமிழ்நாடு கிராம வங்கி தமிழகம் முழுவதும் 630 கிளைகளுடன் 2500க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் 60 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்டு சிறப்புடன் செயலாற்றி வருகின்றது இந்த வங்கி தேசிய வங்கிகள் வழங்கும் அனைத்து சேவைகளையும் உடனுக்குடன் வழங்கும் 

மேலும் கிராமத்தின் கடைக்கோடியில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் வங்கி சேவை எளிதாக கிடைக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கில் கிராம வங்கி செயல்பட்டு வருகின்றது.

 வங்கியில் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்கள் மற்றும் விவசாய கடன்கள் நகை கடன்கள்,சிறு வணிக கடன்கள் விரைவாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதை அனைத்து கிராம மக்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம் என்று வங்கியின் தலைவர் S. செல்வராஜ் தெரிவித்தார்.விழாவிற்கான ஏற்பாடுகளை வங்கியின் கிளை மேலாளர் A.L.ராமசாமி மண்டல மேலாளர் பாஸ்கரன் பொது மேலாளர் குலோத்துங்கன், தாமோதரன் ஆகியோர் சிறப்புடன் செய்திருந்தனர்.