அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு 50 லட்சம் நிதி உதவி


அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் கே.சுப்பராயன் அவர்கள் தொகுதி நிதியில் ₹5000000/ ஐம்பது லட்சம் ஒதுக்கீடு செய்து இன்று 17-12-2020 அதற்கான அடிக்கல் நாட்டினார்.நிகழ்வில் சிபிஐ ஈரோடு  வடக்கு செயலாளர் டி.ஏ.மாதேஸ்வரன், மாநில கட்டுப்பாடு குழு உறுப்பினர் வி.பி.குணசேகரன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் ப.மா.பாலமுருகன், ஒன்றிய செயலாளர்கள் அந்தியூர் எம்.எஸ்.கிருஷ்ணகுமார், பவானி கே.எம்.கோபால், சத்தி தெற்கு எஸ்.சி.நடராஜ்   மாவட்ட குழு உறுப்பினர் கே.சந்திரசேகர், திமுக அந்தியூர் ஒன்றிய செயலாளர் ஏ.ஜி.வெங்கடாஜலம், சிபிஎம் அந்தியூர் தாலுகா செய்லாளர் முருகேசன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர் .மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் அவர்களும், அந்தியூர் தலைமை மருத்துவர் திருமதி கவிதா அவர்களும், மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.