செய்திகளில் அதிகம் இடம் பிடித்தவர் முதல்வர் பழனிசாமி முதல் இடம், ரஜினி 2ம் இடம்

செய்திகளில் அதிகம் இடம் பிடித்தவர் முதல்வர் பழனிசாமி முதல் இடம், ரஜினி 2ம் இடம்

 செய்திகளில் அதிக இடங்களை பிடித்த தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்று, ஆன்லைன் மூலமும், குறுஞ்செய்தி மூலமும் கருத்து கணிப்பு நடத்தியது. இதில், முதல்வர் பழனிசாமியும், அரசியல் கட்சி துவங்க உள்ள நடிகர் ரஜினியும் 2வது இடத்தையும் பிடித்துள்ளனர்.


ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 1,228 பேர் பங்கெடுத்தனர். அதில், முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக 835 ஓட்டுகளும்,(68 சதவீதம் ) ரஜினிக்கு ஆதரவாக 132 ஓட்டுகளும்(10.7 சதவீதம்) மற்றவர்களுக்கு ஆதரவாக 108 ஓட்டுகளும்(8.8 சதவீதம்) கொரோனா வைரஸ்க்கு ஆதரவாக 65 ஓட்டுகளும்(5.3 சதவீதம் ), திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஆதரவாக 45 ஓட்டுகளும்(3.7 சதவீதம் ) கமலுக்கு ஆதரவாக 28 ஓட்டுகளும் (2.3 சதவீதம்) கிடைத்தன.


latest tamil newsகுறுஞ்செய்தி மூலம் நடந்த கருத்துக்கணிப்பில் 621 பேர் பங்கெடுத்துள்ளனர். அவர்களில், ரஜினிக்கு ஆதரவாக 210 ஓட்டுகளும்(33.8 சதவீதம்), கொரோனா வைரஸ் தொடர்பாக 189 ஓட்டுகளும்(30.4 சதவீதம்), முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக 85 ஓட்டுகளும்(13.7 சதவீதம்), ஸ்டாலினுக்கு ஆதரவாக 56 ஓட்டுகளும்(9 சதவீதம்), கமலுக்கு ஆதரவாக 25 ஓட்டுகளும்(4 சதவீதம்), மற்றவர்களுக்கு ஆதரவாக 24 ஓட்டுகளும்(3.9 சதவீதம் பேரும்) கருத்து தெரிவித்துள்ளனர்.