குடுக்குறதை வாங்கிப்போம்! – காங்கிரஸ் அந்தா் பல்டி...




 குடுக்குறதை வாங்கிப்போம்! – காங்கிரஸ் அந்தா் பல்டி...






தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தொகுதிகள் ஒதுக்கீட்டில் பேரம் பேசாது என குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

 

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் தேர்தலில் கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு குறித்து பேசியுள்ள காங்கிரஸ் பொறுப்பாளர் குண்டுராவ் “தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவுடனான கூட்டணியில் தேர்தலை எதிர்கொள்வோம். தொகுதி ஒதுக்கீடு குறித்து திமுகவுடன் பேரம் பேசும் எண்ணமில்லை. வழக்கமான ஆக்கப்பூர்வமான ஆலோசனை கூட்டத்தின் மூலம் தோழமை கட்சிகளோடு ஒற்றுமையை காப்போம். மேலும் தேர்தல் குறித்த ஆய்வில் திமுகவிற்கு 100 இடங்களில் பலத்த போட்டி இருக்கும் என தெரிகிறது. அந்த தொகுதிகளில் திமுகவிற்கு ஆதரவாக காங்கிரஸ் தீவிரமாக செயல்படும்” என கூறியுள்ளார்.

பீகார் தேர்தலில் காங்கிரஸ் பலத்த தோல்வியை சந்தித்த நிலையில் குண்டுராவ் இவ்வாறு கூறியிருப்பது அவா்களுக்கே அவா்கள் பலம் என்ன என்பது நன்றாக தொிந்துள்ளது, இதை தி.மு.க.வும் நன்கு உணா்ந்துள்ளதால் எப்படியாவது காங்கிரசை கழட்டி விடலாம் என்று யோசித்துக் கொண்டிரு்நத தி,மு,க, தலைமைக்கு இது மேலும் சிக்கலையும் சாிவையும் ஏற்படுத்தியுள்ளது,