ந்தெந்த தொகுதிகளை எதிர்பார்க்கிறார்கள் கதர்சட்டையினர்....! காங்கிரஸில் யாருக்கெல்லாம் வாய்ப்பு...!!

ந்தெந்த தொகுதிகளை எதிர்பார்க்கிறார்கள் கதர்சட்டையினர்....! காங்கிரஸில் யாருக்கெல்லாம் வாய்ப்பு...!!



தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் மட்டுமே உள்ளதால் திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளிலும் தொகுதி பங்கீடு பணிகள் தொடங்கியுள்ளன. 

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த முறை வலிமையான வேட்பாளர்களை நிறுத்தினால் மட்டுமே winning வாய்ப்பு....!.

 தொகுதி பங்கீட்டின் போது ஓரளவு இறங்கி வருவது என முடிவெடுத்துள்ளது திமுக தலைமை. அந்த வகையில் காங்கிரஸ் கட்சியும் இந்த முறை வேட்பாளர் தேர்வில் அதீத கவனம் செலுத்தும் எனத் தெரிகிறது. 

 தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர்கள் மயூரா ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம் மற்றும் அமிர்தராஜ், வசந்த் விஜய், ஹசன் மவுலானா, ஜான்சிராணி, செல்வப்பெருந்தகை, பீட்டர் அல்போன்ஸ், செங்கம் குமார், ராமச்சந்திரன், திரவியம், ஹசீனா சையத், நா.சே.ராஜேஷ், ரூபி மனோகரன், மகேந்திரன் மற்றும் இவர்களை தவிர சிட்டிங் எம்.எல்.ஏ.க்களான கே.ஆர்.ராமசாமி, காளிமுத்து, கணேஷ், மலேசியா பாண்டியன், ராஜேஷ்குமார், பிரின்ஸ், ஆகியோரின் பெயர்கள் வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பிடிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 



மிக அதிக வாய்ப்பு இதில் விஜயதரணி கன்னியாகுமரி இடைத்தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டுவதால் அவருக்கு எம்.பி.சீட் கொடுக்கப்படும் எனத் தெரிகிறது. இதனால் விஜய் வசந்த் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடக் கூடும் எனக் கூறப்படுகிறது. 

மற்றபடி மேற்கண்ட பட்டியலில் உள்ள உள்ளவர்களின் பெயர்களில் பெரியளவில் எந்த மாற்றமும் இருக்காது எனத் தெரிகிறது. கட்சி விசுவாசம் இதைத்தவிர தங்கபாலு மகன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகன், மற்றும் இன்னும் பல நிர்வாகிகளின் பெயர்களும் வேட்பாளர் தேர்வு பரிசீலனையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

கட்சிக்காக இதுவரை என்ன செய்தார்கள், சமுதாயத்தில் என்ன மதிப்பு பெற்றிருக்கிறார்கள், பொருளாதார விவகாரத்தில் எப்படி, கட்சி மீதான விசுவாசம் என்பன உள்ளிட்ட பல விவகாரங்களை மையமாக வைத்து காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு நடக்க உள்ளது.

கோவை வடக்கு, ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி, நிலக்கோட்டை, ஸ்ரீபெரும்புத்தூர், கடையநல்லூர், தென்காசி, செங்கம், அறந்தாங்கி, ராயபுரம், மதுரவாயல், கிருஷ்ணகிரி, பட்டுக்கோட்டை, வேடசந்தூர், திருவாடானை, முதுகுளத்தூர், தாராபும், திருமயம், உதகை, குளச்சல், விளவங்கோடு, சேலம் தெற்கு, மொடக்குறிச்சி, பாபநாசம், உள்ளிட்ட 40 தொகுதிகள் அடங்கிய முதற்கட்ட பட்டியல் தயாராக உள்ளது. 

இதில் திமுக என்ன முடிவெடுக்கப் போகிறது என்பது தான் அனைவரது எதிர்பார்ப்பும்....?