+2 தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் சிக்கல் !
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டு, வரும் நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பள்ளி, கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூலை இறுதியில் வெளிவரும் என்ற, கூறப்பட்டு வந்த நிலையில் அதன் பின் அமைச்சர் செங்கோட்டையன் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும் என கூறியிருந்தார். தற்போது அவர் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் ஜூலை முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிட முடியாது என்றும் தற்போது அறிக்கை வெளியிட் டுள்ளார். மேலும் தேர்வு முடிவுகள் வெளியிடுவது குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறையாத காரணத்தால் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம் என்றும் கூறியள்ளார்.