“மூன்று அம்ச திட்டத்தை உலக நாடுகள் பின்பற்ற வேண்டும்” – ஐ.நா சபை வலியுறுத்தல்..!
கொரோனா பேரழிவுகளை தவிர்க்க உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உலகம் உணவு நெருக்கடியில் இருப்பதாக ஐ.நா சபை அதிர்ச்சி தகவல் ஒன்றையும் தெரிவித்து உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரெஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில் சில அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார்.
உலகை அச்சுறுத்தும் வகையில் கொரோனா தொற்று உள்ளது. இதன் மூலம் பல பாதிப்புகளை உலக நாடுகள் அனைத்தும் சந்திக்கின்றது. அதில் மிகவும் முக்கியமாக 50 மில்லியன் மக்கள் வறுமை இல் விழும் அபாயம் உள்ளது. இதுவே இப்படி உள்ள நிலையில் நீண்டகால விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும். ஏற்கனவே 5 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருந்து வந்த நிலையில் இந்த கொரோனா தொற்றால் இன்னும் பல மக்கள் வறுமையை சந்திக்க நேரிடும் அபாயம் உள்ளதாக அவர் தெவித்தார்.
மேலும் அவர் இந்த நிலையை நீடிக்க விட கூடாது என்றும் ஏழை மக்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நிபுணர்கள் அஞ்சும் ஏற்றுமதிக்கான தடைகள் மற்றும் பாதுகாப்புவாதம் போன்றவை பெரும்பாலும் தவிர்க்கப்பட்டிருந்தாலும், கொரோனா தொற்று மற்றும் அடுத்தடுத்த மந்தநிலையின் தாக்கங்களில் மோசமானவை என்பது இன்னும் உணரப்படவில்லை.
ஏராளமான உணவு உற்பத்தி செய்யப்படும் நாடுகளில் கூட, உணவு வினியோகத்தில் இடையூறு ஏற்படுவதற்கான அபாயம் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையை நீடிக்க விடாமல் செய்ய அவரே ஒரு திட்டத்தையும் வகுத்து குடுத்து உள்ளார். அதில் கூறப்பட்டன,
- கொரோனாவால் மோசமாக பாதிக்க பட்ட பகுதிகளை அரசு கவனிக்க வேண்டும் மற்றும் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும்.
- உணவு விநியோக சங்கிலிகளுக்கு அரசாங்கங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். தொற்றால் அதிகமாக பாதிக்கப்படக்கூடிய பிரிவினர்களான சிறு குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் குடுக்கும் பெண்கள் மற்றும் ஊரடங்கால் உணவு கிடைக்காத சிறு குழந்தைகளுக்கு சமூக பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்.
- ஆரோக்கியம் மற்றும் சுற்றுசுழலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் உணவு அமைப்பில் எதிர்கால பாதுகாப்பிற்காக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.