மூடப்படும் மாவட்ட எல்லைகள்; பேருந்து போக்குவரத்து ரத்து!
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர நாடு முழுவதுமான பொது முடக்கம் வருகிற ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், UNLOCK என்ற பெயரில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, பொது முடக்கத்தை மத்திய அரசின் வழிகாட்டுதல்படி நீட்டித்துள்ள மாநில அரசுகள், தங்களது மாநிலங்களில் கொரோனா தொற்றுக்கு ஏற்றவாறு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தளர்வுகளை அளித்து வருகிறது.
அந்த வகையில், தமிழகத்தில் ஜூன் 1ஆம் தேதி முதல் பொதுப்போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு நீங்கலாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மண்டலங்களுக்குள் மட்டுமே பேருந்துகள் இயப்படுகின்றன. ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்துக்கு பேருந்துகள் இயக்கப்படுவதில்லை.
இதனிடையே, கொரோனா தொற்றின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தடுப்பு நடவடிக்கையாக சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், மதுரையின் சில பகுதிகள், தேனி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், தமிழகத்தில் தற்போதுள்ள மண்டல பொது போக்குவரத்து முறையை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்தந்த மாவட்ட எல்லைகளை மூடவும், மாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்துகளை இயக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாகவும் இதற்கான அறிவிப்பை மக்களிடம் இன்று மாலை உரையாற்றும் முதல்வர் பழனிசாமி அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.