5,000 ரூபாய்க்கு மேல் எடுத்தால் கட்டணம்!

5,000 ரூபாய்க்கு மேல் எடுத்தால் கட்டணம்!




ஏடிஎம் மெஷின்களில் வாடிக்கையாளர்கள் 5,000 ரூபாய்க்கு மேல் எடுத்தால் கட்டணம் வசூலிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


 

வங்கிகள் நம் வாழ்வில் பணத் தேவையைப் பூர்த்தி செய்யும் இடமாக இருக்கின்றன. வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்வதற்கும் டெபாசிட் செய்த பணத்தை எடுப்பதற்கும்,

 

கடன் வாங்கவும் மற்ற பரிவர்த்தனைகளுக்கும் முக்கிய இடமாக இருக்கின்றன. வங்கிகளில் பணம் எடுப்பதற்கு வரிசையில் நிற்பதைத் தவிர்க்கவும், வெகுதூரம் சென்று பணம் எடுக்கும் அலைச்சலைத் தவிர்க்கவும்தான் ஏடிஎம் மெஷின்கள் மூலமாகப் பணம் எடுக்கும் வசதி கொண்டுவரப்பட்டது. ஆனால், ஏடிஎம் மெஷின்களில் பணம் எடுப்பதற்குக் குறிப்பிட்ட அளவுக்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. இது வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்துகின்றன.

 

சமையல் சிலிண்டருக்கு வழங்கும் மானியம் தொடங்கி, ஓய்வூதியம், மற்ற அரசின் சலுகைகள் என அனைத்தையும் ஏடிஎம்களில் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு அப்பணம் இலவசமாகக் கிடைப்பதில்லை. சேவைக் கட்டணம் என்ற பெயரில் குறிப்பிட்ட அளவுத் தொகை அவர்களது வங்கிக் கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்படுகிறது.

 

குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஏடிஎம் பணப் பரிமாற்றங்களுக்கு கட்டணம் வசூலிப்பது, ஏடிஎம் கார்டுகளுக்கு தனியாக கட்டணம் வசூலிப்பது, குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்கவில்லை என்றால் அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அபராதமாகப் பிடித்தம் செய்வது, வங்கி தொடர்பான எஸ்எம்எஸ் சேவைக்கு கட்டணம் வசூலிப்பது என வாடிக்கையாளர்களிடமிருந்து வங்கிகள் பணத்தை வசூலித்துக் கொண்டே இருக்கின்றன.




ஒரு வங்கிக் கணக்கில் இருந்து ஒருவர் 5,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால் வங்கிகள் கட்டணம் வசூலிக்கலாம் என மத்திய ரிசர்வ் வங்கியின் ஏடிஎம் பிரிவு பேனல் ஒன்று பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் முன்னாள் தலைமைச் செயலதிகாரியான வி.ஜி கண்ணன் தலைமையில் இந்த ஏடிஎம் பேனல் 2019 ஜூன் மாதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.


இந்த பேனல் அக்டோபர் 22ஆம் தேதியே தனது பரிந்துரையை ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்திருக்கிறது. அதில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.


2019 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், இந்தியாவில் 66 சதவீத ஏடிஎம் பணப் பரிவர்த்தனைகள் 5,000 ரூபாய்க்குக் கீழ்தான் நடந்துள்ளது. எனவே 5,000 ரூபாய்க்கு மேல் எடுக்கப்படும் பணத்துக்குக் கட்டணம் வசூலிக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


இதுமட்டுமல்லாமல், பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது வங்கிகள் கொடுக்கும் இலவச ஏடிஎம் பரிவர்த்தனை எண்ணிக்கை வரம்புக்கு மேல் வசூலிக்கப்படும் கட்டணத்தைத் தற்போதுள்ள 20 ரூபாயிலிருந்து 24 ரூபாயாக உயர்த்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


இவ்வாறாக, வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கியின் ஏடிஎம் பேனல் பரிந்துரை செய்துள்ளது. 






Popular posts
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்
ஈரோடு கிழக்கு; திமுக எடுத்த திடீர் முடிவு..…! அதிர்ச்சியில் மக்கள்...!!
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
TATA எலக்ட்ரானிக்ஸ் எடுத்துள்ள புதிய முடிவு...! கிருஷ்ணகிரி தர்மபுரி மக்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள்...!!
படம்