நாளை முதல் ஆட்டோக்கள் ஓடும்....தமிழக அரசு அதிரடி....

நாளை முதல் ஆட்டோக்கள் ஓடும்....தமிழக அரசு அதிரடி....



சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை தவிர, பிற மாவட்டங்களில் நாளை முதல் ஆட்டோ ரிக்ஷாக்கள் இயக்கிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.




சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆட்டோக்கள் இயங்கலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது. அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:



*ஒரு ஓட்டுனர், ஒரு பயணி என்ற விகிதத்தில் ஆட்டோக்களை இயக்க வேண்டும், அதற்கு மேல் ஆட்களை ஏற்றக்கூடாது *கிருமி நாசினி கொண்டு பயணி கைகளை சுத்தப்படுத்திய பிறகே ஆட்டோவில் ஏற வேண்டும் *


காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆட்டோக்களை இயக்கலாமே தவிர, பிற நேரங்களில் இயக்க கூடாது *


நாளை முதல் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஆட்டோக்களை இயக்க முடியும் * டிரைவர் ற்றும் பயணிக்கு, முக கவசம் கட்டாயம் * ஒவ்வொரு முறை பயணி இறங்கி சென்ற பிறகும், கிருமி நாசினி கொண்டு, ஆட்டோ சுத்தம் செய்யப்பட வேண்டும் *


கண்டெயின்மென்ட் பகுதியில் ஆட்டோக்களை இயக்குவதற்கு அனுமதி கிடையாது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ ஓட்டுனர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக பல்வேறு மாவட்ட தலைநகரங்களிலும் தினசரி ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வந்த நிலையில் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


ஏற்கனவே ஊரகப் பகுதிகளில் மட்டும் சலூன் கடை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.