பா,ஜ, க, விற்கு ஆள் சோ்க்கிறாா் பிரசாந்த் கிஷோா்,,,,? வி.பி.துரைசாமி நீக்கத்தின் பின்னணி...!

பா,ஜ, க, விற்கு ஆள் சோ்க்கிறாா் பிரசாந்த் கிஷோா்,,,,? வி.பி.துரைசாமி நீக்கத்தின் பின்னணி...!



திமுகவில் தலைவர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவராக பார்க்கப்பட்டவர் துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி. தினமும் திமுக அலுவலத்திற்கு தவறாமல் வந்து விடுபவர். இவர் சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் எல். முருகனை சந்தித்துப் பேசினார்.


நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வி.பி. துரைசாமி. துணை சபாநாயகர், எம்.பி., எம்.எல்.ஏ., என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். இவரை துணை சபாநாயகர் ஆக்கியவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி. இவர் சமீபத்தில் மாநிலங்களவை சீட் கேட்டதாகவும், ஆனால், இவருக்கு கொடுக்காமல் அந்தியூர் செல்வராஜூக்கு கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், அப்போது இருந்தே திமுக தலைமை மீது கோபத்தில் இருந்தார் என்றும் கூறப்படுகிறது.

மரியாதை நிமிர்த்தமாக முருகனை சென்று பார்த்தேன் என்று இவா் கூறினாலும், பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்டு மூன்று மாதங்கள் கழித்து தற்போது சென்று பார்ப்பதற்கு என்ன அவசியம் என்ற கேள்வியும் எழுந்தது.

 

முருகனை சந்தித்த பின்னர் செல்போனை துரைசாமி ஸ்விட்ச் ஆப் செய்து வைத்துக் கொண்டார். இதனால், பத்திரிக்கையாளர்கள் உடனடியாக அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இன்று சிலருக்கு மட்டும் அவர் பேட்டி அளித்துள்ளார்.







அதில், ''திமுக உள்பட எல்லா கட்சிகளும் ஜாதி அரசியல் செய்யும்போது, நானும் பாஜக தலைவர் முருகனும் செய்தால் என்ன …? இந்தியாவில் மிகப்பெரிய கட்சியான பாஜக, மாநிலத் தலைவராக ஒரு அருந்ததியரை நியமித்திருக்கிறது ; ஜாதி எங்கே என்று கேட்கும் கட்சிகள் இப்படி பதவிகளை தருவார்களா…?'' என்று கூறியுள்ளார்.

மேலும், தொடர்ந்து மார்ச் மாதம் வரை நான் தலைமை கழகத்துக்கு சென்று வந்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். எல். முருகன், துரைசாமி இருவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை. அவர் எனது உறவினர் என்று தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டச் செயலாளர் மாற்றத்தில் துரைசாமிக்கு விருப்பம் இல்லை என்றும் அவரை அணுகி ஆலோசனை கேட்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கலாம் அல்லது கட்சியிலிருந்து அவரை திமுக நீக்கலாம் என்ற கருத்துக்களும் செய்திகளும் வெளியாகி  இருந்த நிலையில் எந்த விளக்கமும் கேட்கப்படாமல் அவா் அதிரடியாக தி.முக.வில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா்.

 

இந்த நீக்கத்தின் பின்னணியில் தி.மு..க.வின் அரசியல் ஆலோசகா் பிரசாந்த் கிஷோாின் பங்கு பாிெதாக இருப்பதாக கூறப்படுகிறது. அவா் பல நாட்களாகவே தி.மு.க. தலைவா் ஸ்டாலினை சந்தித்து கட்சியில் பல மாற்றங்களை செய்ய வேண்டும் கட்சியில் உள்ள சிலரை நீக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறாா். அதன் அடிப்படையிலேயே இந்த நீக்கம் நடைபெற்றதாக கூறப்படுகிறது,

 

ஏற்கனவே தாழ்த்தப்பட்ட சமூகத்தினரைப் பற்றி கீழ்த்தரமாக பேசிய ஆா். எஸ். பாரதி, தயாநிதி மாறன் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத தி,மு,க, தலைமை தாழ்த்தப்பட்ட சமூகத்தை சாாா்ந்த வி.பி. துரைசாமியை கட்சியிலிருந்து நீக்கியிருப்பது அக்கட்சி மற்றும் அதனுடன் கூட்டணியில் உள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தை சாா்ந்த தொண்டா்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது,

 

இதனிடையே தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.துரைசாமி  தற்போது பா,ஜ,க,வில் இணைந்துள்ளாா். இவா் பா,ஜ,க,வில் இணைந்ததற்கு காரணமே பிரசாந்த் கிஷோா் தான் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே பிரசாந் கிஷோா் இணைப்பால் கடும் கோபத்தில் உள்ள தி.மு.க.வின் இரண்டாம் கட்ட தலைவா்கள் அவாின் பேச்சை கேட்டுக்கொண்டு ஆடும் கட்சி தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ளனா்.

 

நிலைமை இப்படியே போனால் நாளை கட்சிக்குள் யாரும் இருக்க மாட்டாா்கள் போல் உள்ளது. கட்சித்தலைமை எங்களையும் கலந்து ஆலாேசிக்க வேண்டும் என்கிறாா்கள் உடன்பிறப்புக்கள்