கொரோனோ தாக்குதல் கடவுளின் செயலா.....?. "Act of God".. அப்படித்தான் அதை எடுத்துக்கணும்.. நிர்மலா சீதாராமன் பேச்சு
இந்த வைரஸ் பிரச்சினை, கடவுளின் செயல் என்றுதான் நாம் கருத்தில் எடுத்து கொள்ளப்பட வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பொதுவாக வங்கிகளில் Act of God என்று ஒரு வார்த்தை உள்ளது.. இதற்கு அர்த்தம் மனித சக்தியால் தடுக்க முடியாத பேரிடரோ, வெள்ளமோ, தொற்றோ வருமாயின், அதனால் வாணிபம் பாதிக்கப்பட்டால் அதற்கான நடவடிக்கையை வங்கிகள் எடுக்க முழு உரிமையும் உண்டு. இதைத் தான் Act of God என்பார்கள்.
இந்த வார்த்தையை தற்போது நிதியமைச்சர் பயன்படுத்தி உள்ளார். இந்த வைரஸ் பிரச்சினை, கடவுளின் செயல் என்றுதான் நாம் கருத்தில் எடுத்து கொள்ளப்பட வேண்டும், அவ்வாறு கருதி மாநில அரசுகள் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதை பல்வேறு தரப்பினரும் விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.
ஒரு கொள்ளை நோய்க்கு எப்படி கடவுள் காரணமாவார் என்றும், தொற்று குணமாகுவதும், அதன்பிறகு டிஸ்சார்ஜ் ஆகியும் வரும் மக்களை என்னவென்று சொல்வது? அதற்கும் கடவுள்தான் காரணமா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதைவிட ஒரு படிமேலே போய் கடவுள் மறுப்பு கொள்கை உடைய நாடுகளிலும் வைரஸ் பரவி உள்ளதே, அதற்கும் கடவுள்தான் காரணமா என்றும் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.