முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை ( P.G.TET ) ஒத்தி வைக்க பாஜக கல்வியாளர் பிரிவின் சார்பாக தமிழக அரசுக்கு வேண்டுகோள்....

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை ( P.G.TET ) ஒத்தி வைக்க பாஜக கல்வியாளர் பிரிவின் சார்பாக தமிழக அரசுக்கு வேண்டுகோள்.....



தமிழகத்தில் ஆசிரியர்கள் கோரிக்கைகள் கேட்கப்படவே இல்லை..எந்த கோரிக்கையும் நிறைவேற்றவில்லை.. ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்க வில்லை.

இந்த நிலையில்...அரசு பள்ளி ஆசிரியர்கள் TET தேர்வு கட்டாயம் தேர்ச்சி பெற்றால் தான் தகுதியான ஆசிரியர்கள் ஆகும் வாய்ப்பு.... இல்லை என்றால் அவர்கள் ஆசிரியர் பணியை தொடர முடியாது என்று உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பை உறுதி செய்து இருக்கிறது..

அதற்காக தமிழக அரசு தேர்தலை மனதைக் கொண்டும் ஆசிரியர்களின் வாக்கு வங்கியை கணக்கெட்டும் அவர்கள் தேர்தல் பணியாற்றி இவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக சீராய்வு மனு செய்து பணிபுரியும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்காகஅவர்களை பாதுகாக்கிறது...

அதே நேரத்தில் நான்காண்டுகளாக வேலைக்காக காத்திருக்கக்கூடிய முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை உடனடியாக அறிவிக்கிறது...



அதுவும் கடினமான பாடங்களை புதிய பாடங்களை அறிமுகப்படுத்தி... உடனே அதற்கான தகுதித் தேர்வை போட்டித் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த திட்டமிட்டு....கால அட்டவணை வெளியிட்டு...ஹால் டிக்கெட் சம்பந்தப்பட்ட தேர்வுகளுக்கு அனுப்பி உள்ளது.

 ஆசிரியர் தேர்வு வாரியத்தின் திடீர் அறிவிப்பு தேர்வு எழுதும் முதுநிலை ஆசிரியர்களுக்கு *வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது* போல் உள்ளது. இதற்கு முன் பலமுறை தேர்வு எழுதியும் TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலையும் கிடைக்கவில்லை..

இப்பொழுது இரண்டு மாத கால அவகாசம் கேட்கும் போட்டி தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு கால் அவகாசம் வழங்காமல் பாடத்திட்டத்தை மாற்றி உடனடியாக தேர்வு நடத்துவது என்பது ஏதோ பெரிய சதி நடப்பது போல் தெரிகிறது..

அவ்வாறு உடனடித் தேர்வு நடத்தி அவர்களுக்கு வேண்டியவர்களை நீங்கள் தேர்வு செய்து பணம் பெற்றுக் கொண்டு பணி நியமனம் செய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக கருதுகிறார்கள்...

கடினமான பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பதற்கு ஏற்ப... அந்த ஆசிரிய சகோதர, சகோதரிகள் படித்து தங்களை தயார் செய்து கொண்டு தேர்வு எழுதுவதற்கான கால அவகாசத்தை தர வேண்டும் அல்லவா?... அதுதானே நியாயம் நீதி நேர்மை ... நீதிமன்ற தீர்ப்பும் பரிசீலிக்க தானே சொல்கிறது...

அதை விடுத்து அவர்களை நசுக்குவது போல் அவர்களுக்கு எந்தவித கால அவகாசம் வழங்காமல்... சுமையான புதிய பாடத்திட்டத்துடன் உடனடியாக தேர்வு நடத்துவது என்பது வருங்கால ஆசிரியர்கள் அரசு வேலைக்கு போய்விடவே கூடாது என்பதற்காக இந்த திமுக ஆட்சி ..வழங்கும் தண்டனையாகவே கருதுகிறோம்..

பனி நாடும் ஆசிரியர்களின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் பரிசீலிக்க சொல்லி உத்தரவிட்டும்... தமிழக அரசு பரிசீலிக்க மறுப்பது ஏன்? ....

ஆசிரிய சகோதர சகோதரிகளின் பல்லாயிரக்கணக்கானோர் குடும்பத்தோடும் குழந்தைகளோடும் எண்ணற்ற பணிகளோடும் வேலை இல்லாமல் தனியார் பள்ளிகளில் பணியாற்றியும் ஒவ்வொரு நாளும் வாழ்க்கை நடத்துவதே கேள்விக்குறியாக உள்ள நிலையில் ஆசிரியர்களின் போட்டித் தேர்வுக்கான தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் பாடத்திட்டத்தினை மாற்றி அமைத்ததன் காரணமாக ஒத்திவைக்க வேண்டும் என ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கை ஏற்று இரண்டு மாத கால அவகாசம் வழங்கி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சி கல்வியாளர் பிரிவின் சார்பாக தமிழக அரசை பணிவோடு வேண்டி கேட்டுக்கொள்கிறோம்...

எத்தனையோ தேர்வுகளை ஒத்தி வைத்திருக்கிறது.. ரத்து செய்து இருக்கிறது... தேர்வுகள் நடத்தி முடிவுகள் வெளியிடாமல் இருக்கிறது... தேவர்கள் பணி வழங்காமல் இருக்கிறது... இப்படி எத்தனையோ குளறுபடிகளோடு நடக்கும் தமிழக தேர்வுகளின் வரலாறுகளை தமிழக அரசு மறந்துவிடாமல் எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமும் ஆசிரியர் சகோதர, சகோதரிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்று உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பரிசளித்து தேர்வை ஒத்தி வைக்க வேண்டுமாய் வேண்டுகிறோம் என்று பாரதிய ஜனதா கட்சி கல்வியாளர் பிரிவு மாநில தலைவர் கே. ஆர். நந்தகுமார் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.