களமருதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் ஒழுங்கீன நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை...!
களமருதூர் அரசு மேல்நிலைப்பள்ளி கல்வி மேதை காமராஜர் ஐயா அவர்களால் திறந்து வைக்கப்பட்டு இன்று முதல் அனைத்து மாணவர்களுக்கும் வழிகாட்டும் வழியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
தற்போது அந்த பள்ளியில் படித்த மாணவர்கள் நிறைய பேர் நல்ல நிலைமையிலும் உள்ளனர் ஆனால் தற்போது சமீப காலமாக மேற்கண்ட களமருதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முகை சிகை அலங்காரம் ஒழுங்காக செய்து கொண்டு வருவதில்லை அதுமட்டுமல்லாமல் கடைத்தெருவில் அடித்துக்கொண்டு வன்முறையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இது மட்டும் அல்லாமல் மாணவர்களின் கழிவறையில் கூலிப் , ஹான்ஸ் வகையிலான போதைப் பொருள்கள் புழங்குவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர் கல்வியை விட ஒழுக்கமே சிறந்ததாக கருதப்படும் நம் நாட்டில் மாணவர்கள் கற்காமல் ஒழுக்கமாக பள்ளிக்கு வருவதுமில்லை.
முக்கால் பேண்ட் மற்றும் ஒழுங்கீனமற்ற காலணிகள் மற்றும் ஒழுங்கீனமற்ற சிகை அலங்காரத்துடன் பள்ளிக்கு வருகின்றனர் இது மற்ற மாணவர்களை கெடுக்கும் வகையில் உள்ளது. இதனால் சமூக சீர்கேடு ஏற்படுகிறது.
பள்ளியில் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் யார் சொன்னாலும் மாணவர்கள் கேட்பதில்லை அந்த நிலைமையில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.
எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உடனடியாக ஆய்வு செய்து இந்தப் பள்ளி மட்டுமல்லாமல் இது போன்று எந்தெந்த பள்ளிகளில் இருக்கிறதோ அந்த பள்ளிகள் அனைத்திலும் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இது சம்பந்தமாக மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி மாணவர்களின் நலனைக் காத்திட வேண்டும் என்று தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என்றுதமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு கோரிக்கை மனுவை அளித்துள்ளது.