CBSE பள்ளிகளில் 3, 5, 8 வகுப்புகளில் Fail செய்யும் நடைமுறை: அன்பில் மகேஷ் அழத் தேவையில்லை..?!
சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி விகிதத்திற்கு குறைந்த மதிப்பெண்கள் பெற்றால் ஃபெயில் செய்யும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கை அனைத்துப் பள்ளிகளுக்கும் மார்ச் 18 ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை குழந்தைகளின் கல்விக் கனவை தகர்க்கும் நடவடிக்கை என்றும், தேர்வு என்றாலே என்ன என்று தெரியாத மாணவர்களுக்கு இதுபோன்ற அழுத்தங்களைக் கொடுக்கக் கூடாது என்று தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
9 ஆம் வகுப்பு வரை படிக்கக் கூடிய மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி என்ற நிலை இருந்து வந்த நிலையில், சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்த நடைமுறை தற்போது தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளது. மேலும், இதற்கு பெற்றோர்களிடம் இருந்து ஒப்புதல் கடிதங்களையும் பள்ளிகள் சார்பில் பெறப்பட்டு வருகிறது. தற்போது, அடுத்த வகுப்புக்கான வகுப்புகள் தொடங்கிவிட்டதால், இந்த நடைமுறை அடுத்த ஆண்டில் முழுமையாக நடைமுறைக்கு வரும் என்று ஆசிரியர்கள் தெரிவித்து வருகின்றனர்.
3, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களை ஃபெயில் ஆக்கும் சிபிஎஸ்இ நடவடிக்கையை எதிர்த்து பெற்றோர் குரல் கொடுக்க வேண்டும். இது குழந்தைகளின் பள்ளி இடைநிற்றலை அதிகப்படுத்தும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், தேசியக் கல்விக் கொள்கையை படிப்படியாக அமல்படுத்தும் பணியை மத்திய அரசு தொடங்கிவிட்டது.
கல்வி உரிமைச் சட்டத்தின்படி நாம் நம்முடைய பிள்ளைகளை பாதுகாத்துவிட்டோம். ஆனால், சிபிஎஸ்இ படிக்கும் பிள்ளைகள், பெற்றோருக்கு தனி சட்டம் அமல்படுத்தப்படும்போது இடைநிற்றல் அதிகமாகும். இதனை பெற்றோர்கள் எதிர்த்து கேள்விகள் கேட்க வேண்டும். சிபிஎஸ்இயின் என்சிஇஆர்டி பாடப் புத்தகங்கள் மூலம் வரலாற்றை மறைக்க முயற்சி செய்கிறது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால்தான் தேசிய கல்விக் கொள்கையை நாம் தொடர்ந்து எதிர்க்கிறோம்.
சிபிஎஸ்இ பள்ளிகள், 3, 5, 8 ஆம் வகுப்பு மாணவர்கள் கல்வியில் பின் தங்கியிருப்பதாகக் கூறி அவர்களை ஃபெயில் ஆக்குவதற்கான நடைமுறைக்கு ஒப்புதல் கடிதம் கோரினால் அதனை எதிர்த்து கேள்வி கேளுங்கள். சிபிஎஸ்இயின் இந்த நடவடிக்கையை நாம் வேடிக்கை பார்க்க முடியாது." என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், சிபிஎஸ்இ தேர்வு முறையில் 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றால் ஃபெயில் செய்ய யார் சொன்னது. அப்படி ஒன்றும் எதுவும் இல்லை என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: சிபிஎஸ்இ தேர்வு முறையில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றால் ஃபெயில் செய்ய யார் சொன்னது. அப்படி ஒன்றும் எதுவும் இல்லை. மத்திய அரசு எது சொன்னாலும் மாநில அரசு அதற்கு எதிர்ப்பாகத்தான் எதையாவது சொல்லும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து இணைய வாசிகள் பலர் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இது எப்படி இருக்கிறது என்று சொன்னால் ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக இருக்கிறது.
தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் இருந்த இப்பள்ளிகளின் எண்ணிக்கை தற்போது 4 இலக்கங்களாக மாறி இருப்பதற்கு காரணமே இவர்கள் தான்.
கருணாநிதி முதலமைச்சராக இருந்த சமயத்தில் தமிழகத்தில் இருந்த மெட்ரிக் பள்ளிகளை எல்லாம் ஒழித்து விட்டு அனைத்து பள்ளிகளிலும் சமச்சீர் பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் விளைவு தான் சிபிஎஸ்இ பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம்.
சமச்சீர் கல்வியில் தரம் இல்லை என்பதால் தான் பெற்றோர்கள் சிபிஎஸ்சி பள்ளிக்கு மாறுகிறார்கள். தற்போது இது ஒரு மோகமாகவே வளர்க்கப்பட்டு வருகிறது.
அதுவுமில்லாமல் இந்த பள்ளிகளை தமிழகத்தில் தொடங்குவதற்கு தடை இன்மை சான்றிதழ்கள் ரூபாய் 30 லட்சம் முதல் 40 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு வழங்கியவர்களும் இவர்கள்தான். பெரும்பான்மையான CBSE பள்ளிகளை திமுகவை சார்ந்தவர்கள் தான் நடத்தி வருகிறார்கள். இதில் அமைச்சர் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது?
அதுவும் இல்லாமல் இந்தப் பள்ளிகளில் சாதாரணமாக ஒரு மாணவருக்கு வருடத்திற்கு 40 ஆயிரம் முதல் இரண்டு லட்சம் வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். இவ்வளவு கட்டணம் வசூலிக்கின்ற இந்த பள்ளிகள் 30 மார்க் பெற்று தரக்கூடிய தகுதி இல்லை என்று சொன்னால் இதற்குப் பெற்றோர்கள் தான் அழ வேண்டும். அமைச்சர் அன்பில் மகேஷ் அழத் தேவையில்லை.
புதிய கல்விக் கொள்கையில் 3, 5, 8 வகுப்புகளில் பொது தேர்வு நடத்துவது என்பது மாணவர்களின் தகுதியை நிர்ணயிப்பதற்கு மட்டுமல்ல ஆசிரியர்கள் ஒழுங்காக வேலை வாங்குவதற்கான உத்தியும் கூட.
அன்பில் மகேஷ் தலைமையில் செயல்படும் தமிழக பள்ளிக்கல்வித்துறை வேண்டுமானால் இதில் தோற்றுப் போய் இருக்கலாம், ஆசிரியர்களை ஒழுங்காக வேலை வாங்கும் தகுதி அவர்களுக்கு இல்லாமல் இருக்கலாம் ஆனால் மத்திய கல்வி வாரியம் அப்படி இல்லை.
இந்தப் பாடத்திட்டத்தில் படிக்கின்ற அனைத்து மாணவர்களும் நல்ல தரத்துடனும் தகுதியுடனும் வெளிவர வேண்டும் என்கிற நோக்கில் புதிய கல்விக் கொள்கையின் அம்சத்தை ஏற்றுக் கொண்டிருப்பது வரவேற்கத் தகுந்தது.
தமிழக முதல்வரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் ஆசிரியர்களை வேலை வாங்குவதை விட்டுவிட்டு நமது மாணவர்களை தரக்குறைவாக மதிப்பிடுவது தேசத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாகும்.
இனியாவது புரிந்து கொண்டால் தமிழகம் பிழைக்கும். இல்லாவிட்டால் தமிழ்நாடு தற்குறி தேசமாகிவிடும் என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்கள்.
இது தமிழக முதல்வர் மு க ஸ்டாலினும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷும் புரிந்து கொண்டால் நாட்டிற்கு நல்லது.