பேராசிரியர். கு.வணங்காமுடி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி......
பேராசிரியர். கு.வணங்காமுடி அமைப்பு செயலாளர். தமிழியக்கம். தாளாளர் ,சப்தகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி .வெங்கடேஷ் நகர் அலசனத்தம் சாலை ஒசூர் ... தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தில் மாநில கல்வி ஆலோசகராக மிகச் சிறப்பாக பணியாற்றியஅவர்கள் நேற்று 05-05-2025 இரவு 11.49 மணியளவில் இயற்கை எய்தினார்.
அண்ணரின் இறுதி நிகழ்வுகள் ஓசூர் சப்தகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி எதிரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று 06-05-2025 செவ்வாய் கிழமை மாலை 4-30 மணிமுதல் நடைபெறும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்..
அவரை இழந்து வாடும் குடும்பத்தார் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தனியார் பள்ளி நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்க வேண்டுகிறோம்.
ஒரு சிறப்பு மிக்க தமிழ் ஆர்வலர், கல்வியாளர். அவரது குடும்பத்திற்கு, கல்வி நிறுவனங்களுக்கு ஆழ்ந்த இரஙகலைத் தெரிவித்து கொள்கிறோம்.
வற்றாத கண்ணீருடன்.
கே.ஆர்.நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்