ஜூன் 2 பள்ளிகள் திறப்பு: முடிவை மாத்தாதீங்க அமைச்சரே....!

 ஜூன் 2 பள்ளிகள் திறப்பு:    முடிவை மாத்தாதீங்க அமைச்சரே....!

10ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.இந்த பள்ளி தேர்வு முடிகளை வெளியிட்டபிறகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி போக வாய்ப்பு உள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் " நாம் ஏற்கனவே அறிவித்தபடி, கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ந்தேதி (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படும். இதுவரை அந்த முடிவில்தான் இருக்கிறோம். முதல்வர் அலுவலகத்தில் இதற்காக தனித்துறையே இருக்கிறது. அவர்கள் பள்ளி திறப்பு நேரத்தின்போது வெயிலின் தாக்கத்தை கணக்கிட்டு, அறிவுறுத்துவார்கள். அதன் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு இருக்கும் என்று கூறினார்.

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு உள்ளதால், வெயிலின் தாக்கம் ஜூன் மாத தொடக்கத்தில் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கால சூழ்நிலையும் இதற்கு ஏற்றார் போல் மாறி உள்ளது எனவே இந்த ஆண்டு வழக்கம் போல் ஜூன் 2ம் தேதி திறக்கப்படவே அதிக வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு இடையில் ஊடகங்களும் சமூக ஆர்வலர்கள் என்கிற பெயரில் சிலரும் உட்புகந்து இதைக் கெடுக்காமல் இருந்தால் சரி.

 எனினும் அரசு கோடை வெயிலை பொறுத்து இந்த மாத இறுதியில் முடிவெடுக்கும் என தெரிகிறது. 

அமைச்சரே...! அவங்க சொல்றாங்க, இவங்க சொல்றாங்க என்று இப்போது எடுத்த முடிவை மாற்றாதீர்கள். கடந்த காலங்களைப் போல் பள்ளிகள் திறப்பது தாமதம் ஏற்பட்டால் மக்கள் தங்கள் முடிவை மாற்றி எழுதுவார்கள்.