Vacational மாணவர்கள் பாலிடெக்னிக்கில் சேரலாம் என்கிற அறிவிப்பு யாருக்கு லாபம்...?
2 பொதுத் தேர்வில் வணிகவியல் உள்பட அனைத்து பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் 2025- 26 ஆம் கல்வியாண்டில், பாலிடெக்னிக்கில் நேரடி 2 ஆம் ஆண்டு (Lateral Entry) சேர முடியும் என தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
கணிதம் - அறிவியல் பாடப்பிரிவு மாணவர்கள் மட்டுமே பாலிடெக்னிக்கில் நேரடியாக 2 ஆம் ஆண்டு சேர முடியும் என்ற விதி தளர்த்தப்பட்டு, அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் சேரலாம் என விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பாலிடெக்கிக் கல்லூரிகளில் வரும் கல்வி ஆண்டில் முதலாவது ஆண்டு படிக்க உள்ள மாணவர்களுக்கு சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக அறிவிப்பு வெளியிடப்பட்டள்ளது.
சிவில் (civil), மெக்கானிக்கல் (Mechanical), எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் (Electrical and Electronics), எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் (Electronics & Communication) உள்ளிட்ட பல்வேறு துறைகளில் டிப்ளமோ படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பத்தாம் வகுப்பு (SSLC/Matriculation) தேர்ச்சி (அல்லது) அதற்கு இணையான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாணவ மாணவியர்கள்: https://www.tnpoly.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் மாவட்ட சேவை மையங்கள் (TNEA Facilitation Centre) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பதிவுக் கட்டணமாக ரூ150/-யை விண்ணப்பதாரர் Debit Card /Credit Card/Net Banking இணையதள வாயிலாக செலுத்தலாம். SC/ST பிரிவினருக்கு பதிவுக் கட்டணம் செலுத்த அவசியமில்லை.
முதலாமாண்டு பட்டயப் படிப்பிற்கான இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய துவங்கும் நாள்: 07.05.2025
முதலாமாண்டு பட்டயப் படிப்பிற்கான இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள்: 23.05.2025
காமர்ஸ் மாணவர்களும்
+2 பொதுத் தேர்வில் வணிகவியல் உள்பட அனைத்து பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் 2025- 2026 ஆம் கல்வியாண்டில், பாலிடெக்னிக்கில் நேரடி 2 ஆம் ஆண்டு (Lateral Entry) சேர முடியும் என தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என்று சொன்னாலும் அரசின் இதுபோன்ற முடிவுகள் பிற்காலத்தில் இதை எங்கு கொண்டு போய் விடுமோ என்கிற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் B.E., முடித்தவர்கள் B.Ed. படிக்கலாம் என்ற ஒரு சட்டம் கொண்டு வந்தார்கள். இது எதற்காக ஏற்படுத்தப்பட்டது என்று சொன்னால் அப்போது தொடங்கப்பட்ட நிறைய பிஎட் கல்லூரிகளுக்கு வருமானத்தை அள்ளித்தரும் வகையில் அமைந்திருந்தது.
அதேபோன்று 96 முதல் 2001 வரையிலான திமுக ஆட்சி காலத்தில் 9 ,10 மற்றும் 11, 12 வகுப்புகளுக்கு மட்டும் சிறப்பு பள்ளிகளை திறப்பதற்கு அனுமதி கொடுத்தார்கள்.
அந்த கால சூழ்நிலையில் பத்தாம் வகுப்பிலும் 12ஆம் வகுப்பிலும் அதிக மதிப்பெண் பெற்றால் தான் அடுத்த கட்ட நகர்வு என்றிருந்த நிலையில் இது ஒரு பெரிய வியாபாரமாகவே பார்க்கப்பட்டது. ஆளுங்கட்சியை சார்ந்தவர்கள் இந்த வியாபாரத்தில் கொழுத்து செழிப்பதற்காகவே இது போன்ற திட்டங்களை அமல்படுத்தினார்கள்.
அதே போன்ற பார்வையில் தான் இந்த வக்கேஷனில் மாணவர்களும் பாலிடெக்னிக்கில் இரண்டாம் ஆண்டு சேரலாம் என்கிற அறிவிப்பை பார்க்க வேண்டியதாய் இருக்கிறது.
இதற்குக் காரணம் அரசு மற்றும் தனியார்களால் ஏராளமாக தொடங்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை இல்லாமல் தவித்துக் கொண்டிருப்பதால் அந்த இடங்களை நிரப்புவதற்கான திட்டமாகத்தான் தான் இது இருக்கின்றது.
இது ஆட்சியாளர்கள் செய்கின்ற மிகப்பெரிய தவறு. கல்வி நிறுவன அதிபர்கள் பணம் கொடுக்கிறார்கள் என்பதற்காக எது வேண்டுமானாலும் தொடங்கு எதை வேண்டுமானாலும் நடத்து என்று அவர்களுக்கு ஏற்ற வகையில் சட்டத்தை வளைப்பது பலரின் பொருளாதாரத்தையும் எதிர்காலத்தையும் வீணடிக்கும் செயலாகும்.
கடந்த காலங்களில் வரம்பு மீறி எல்லைகளை தாண்டி சந்துகளிலும், பொந்துகளிலும் அளவில்லாமல் தொடங்கப்பட்ட ஏராளமான ITIகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களால் பொதுமக்களின் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் வீணடிக்கப்பட்டது மட்டுமல்ல அந்த நிறுவனங்களும் ஒரு சில ஆண்டுகளிலே அடியோடு மூடப்பட்டதும் தான் மிச்சம். தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் நிலையும் அப்படித்தான் உள்ளது. 700க்கும் மேற்பட்டு இருந்த இந்த கல்லூரிகள் எண்ணிக்கை இப்போது 400க்கும் கீழ் குறைந்து விட்டது. இதற்கெல்லாம் காரணம் அரசின் தவறான கொள்கை முடிவுகள் தான். கல்வி மாநில பட்டியலுக்குள் இருப்பது தான் இத்தகைய குழப்பங்களுக்கு காரணங்கள்.
இதை தவிர்ப்பதற்கு ஒரே வழி தமிழகம் தேசிய கல்விக் கொள்கைக்குள் நுழைவது தான். பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்விக் கொள்கை இந்தியாவிற்கு மட்டுமல்ல அகில உலகத்திற்கு வழிகாட்டுவதாக அமைந்துள்ளது. இது தமிழகத்தில் உள்ள முட்டாள்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்களோ?!