கிருஷ்ணகிரி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாமக கண்டன ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி,அக்.24- கிருஷ்ணகிரி நகராட்சி நிர்வாகத்தின் சீர்கேட்டை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் செ.மோகன்ராம் ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினார். அப்போது பேசியதாவது : கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளிலும் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கிருஷ்ணகிரி நகரப் பகுதிக்கு எளிதில் பொதுமக்கள் வந்து செல்ல முடியாத நிலை உள்ளது.மேலும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் எளிதில் கிருஷ்ணகிரி நகரப் பகுதிகளில் நடமாட முடியாத சூழ்நிலை நிலவுவதாக குற்றம் சாட்டினார். தற்காலிகமாக பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் கடைகள் அமைத்தும் பொதுமக்களுக்கு வாகன நெரிசல் அதிகளவில் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் நகராட்சி பகுதிகளில் எளிதில் வந்து செல்வதற்கு ஏதுவாக நகரத்தில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றிட வேண்டும் என்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் நகர செயலாளர் நிதிஷ், பூபதி, தலைமை தாங்கினர். மின்னல் சிவக்குமார், மஞ்சுநாத், சோமு (எ)சோமசுந்தரம், நந்தகுமார், கோவிந்தன், லட்சுமணன், மாணிக்கம் ஆகியோர் முன்னில வகித்தனர், மகளிர் அணி பொறுப்பாளர்கள் பாரதி, கலைவாணி, மாதேஸ்வரி, ஒன்றிய செயலாளர்கள் மகேந்திரன், வேலு, ரமேஷ், மாது, சென்ராயப்பன், சந்திரசேகர், செல்வகுமார், மாவட்ட பொறுப்பாளர்கள் பாலகிருஷ்ணன், பொன்னப்பன் ஆறுமுகம் ஜெயராமன், சத்தியமூர்த்தி, சின்ன பையன், ரவி, சரவணன், கிருஷ்ணமூர்த்தி, மூர்த்தி, சிவராஜ், பலராமன் உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் 200-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
K. Moorthy Krishnagiri Reporter