ஆர்.எஸ்.பாரதியை விரைவில் சிறைக்கு அனுப்புவோம்'' , : தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை
அவதூறு வழக்கில் தி.மு.க.,வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை விரைவில் சிறைக்கு அனுப்புவோம்'' , என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஆர்எஸ் பாரதி என்னை சின்னப்பையன் என்கிறார். இந்த சின்னப்பையன் என்ன செய்ய போகிறார் என பாருங்கள். ராசியான ஆர்எஸ் பாரதி கையை நான் பார்த்து விடுகிறேன். ஆர்எஸ் பாரதியை விட போவதில்லை. யாரும் எதிர்த்து பேசாததால், அவர் தொடர்ந்து அவதூறு பேசி வருகிறார். அவரது பேச்சு, கர்வம், ஆணவம், அட்டூழியத்தை தாண்டி போகிறது.
மடியில் கனம் இருப்பதால் தமிழகத்தில் சிபிஐ விசாரணை மேற்கொள்ள முட்டுக்கட்டை போடுகிறார் ஸ்டாலின். தி.மு.க., ஆட்சி அதிகாரம் மகன், மருமகனிடம் தான் உள்ளது. இவர்களை சந்திக்காமல் எதுவும் நடக்காது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை பொறுத்த வரை நான் இந்த பிரச்னையை ஆரம்பிக்கவில்லை. அவர் தான் இரண்டு நாட்களுக்கு முன்னர் பா.ஜ.,வில் ரவுடிகள் சேர்கின்றனர் என நிருபர்களிடம் கூறினார். இதனால், அவரது வரலாற்றை சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு உண்டு. இந்தியாவில், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்த ஒருவர் மாநில காங்., தலைவராக இருப்பது தமிழகத்தில் மட்டும் தான்.
ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு அனைவருக்கும் தெரியும். அங்கு செல்வப்பெருந்தகையை கைது செய்ய முயன்ற போது, அவர் குதித்து காலை உடைத்து கொண்டது தெரியும். இன்று பசு தோல் புலியாக, நான் காந்தி வழியாக வந்தவன், நான் நல்லவன் என சொல்லும் போது, வேறு வழியில்லாமல் அனைத்து வழக்குகளையும் வெளியிட வேண்டிய நிர்பந்தம். அதிமுக ஆட்சியில், அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார்.
அவர் மீது சிபிஐ வழக்கு, பண மோசடி வழக்கு என 304 வழக்கு உள்ளது. இவர் சொல்கிறார் பா.ஜ.,வில் ரவுடிகள் சேர்கிறார்கள் என்று. ஆகவே அவர் யார் என்பதை நாங்கள் சொல்கிறோம். அவர் என்னை நீதிமன்றத்திற்கு அழைக்கிறார். நானும் அழைக்கிறேன். அவர் லண்டனில் முதலீடு செய்துள்ள பணத்தைப் பற்றி பேசுவோம். ரிசர்வ் வங்கியில் கடை நிலை ஊழியராக இருந்த செல்வப்பெருந்தகை லண்டனில் என்ன வாங்கி வைத்துள்ளார்? அவரது மனைவி பெயரில் என்ன சொத்துகள் உள்ளன? ஆடிட்டர் ஏன் கொலை செய்யப்பட்டார்? அந்த வழக்கில் கைமாறிய பணம் எவ்வளவு?
இவ்வாறு அவர் கூறினார்.