கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் கே. எம்.சரயு உத்தரவின் பேரில் கால்வாய்யில் இருந்த குப்பை அகற்றம்

 கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் கே. எம்.சரயு உத்தரவின் பேரில் கால்வாய்யில் இருந்த குப்பை அகற்றம் 

கிருஷ்ணகிரி மே. 26- கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் ஏரியிலிருந்து புளியம்பட்டி வழியாக பெணுகுண்டாபுரம் ஏரிக்குச் செல்லும் கால்வாய் புளியம்பட்டி ஊராட்சி உள்ள  போச்சம்பள்ளி  சந்தூர் செல்லும் வழியில் கால்வாய்  குப்பை அடைப்பு இருந்துள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் சரயு, கூடுதல் ஆட்சியர் வந்தனா கார்க் ஆகியோர் கவனத்திற்கு சென்றிருந்தது. இதுகுறித்து உடனடியாக குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யவேண்டும் என்று  பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமிக்கு உத்தரவிடப்பட்டிருந்தார். அதன் அடிப்படையில் புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ஆர்.ரங்கநாதன் தலைமையில் கால்வாயில் உள்ள குப்பைகளை ஜேசிபி மூலம் அகற்றப்பட்டது.

K. Moorthy Krishnagiri Reporter