முழு ஆண்டு தேர்வு குறித்து தனியார் பள்ளிகள் முக்கிய அறிவிப்பு....!!

 முழு ஆண்டு தேர்வு குறித்து தனியார் பள்ளிகள் முக்கிய அறிவிப்பு....!!

தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க நிர்வாகிகள் பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.. 

சிபிஎஸ்சி பள்ளிகள் அரசு பொதுத் தேர்வை நடத்தி முடித்து வெற்றிகரமாக 2024 புதிய கல்வி 

ஆண்டை இன்று தொடங்கியுள்ள அனைவருக்கும் இவ்வாண்டு நல்லாண்டாக அமைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை பள்ளிகளில் நடைபெறும் அரசு இரண்டு பாடங்களுக்கான பொது தேர்வு 22,23 தேதிகளை அரசு அறிவித்துள்ள புதிய மாற்றத்திற்கு நாம் கட்டுப்படத் தேவையில்லை..

 தனியார் பள்ளிகள் இயக்குனரகம் எந்தவித அறிக்கையும் அரசாணையும் விடவில்லை.

எனவே வருகின்ற முழு ஆண்டு தேர்வுகளை ஏற்கனவே திட்டமிட்டபடி 12.04.2024 ஆம் தேதிக்குள் முடித்து விடுமுறை விடுவதற்கு மாநில சங்கம் முடிவெடுத்துள்ளது.. 

தமிழக அரசு ரம்ஜான் விடுமுறையை கணக்கில் எடுத்து இரண்டு தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளது..

அரசு அறிவித்துள்ளது அரசு பள்ளிகளுக்கு மட்டும்தான். தனியார் பள்ளிகளுக்கு அல்ல.

தனியார் பள்ளிகள் திட்டமிட்டபடி தேர்வுகளை சிறப்பாக நடத்தி தரமான கல்விக்கு உத்தரவாதம் வழங்கி விடைத்தாள்களை திருத்தி தேர்வு முடிவுகளை அறிவித்து ஜூன் மாதம் வழக்கம் போல் பள்ளிகள் திறந்து அதற்குள்ளாக புதிதாக புதிதாக மொத்த மாணவர்களையும் சேர்த்து மாணவர்களின் எண்ணிக்கையை

கூட்டி தரமான கல்வியை உறுதி செய்ய வேண்டுமாய் அன்போடு வேண்டுகிறேன். 

அதன்படி 22 ஆம் தேதி நடைபெற வேண்டுமென அரசு நிர்ணயித்துள்ள தேர்வுகளை 06.04.2024 ஆம் தேதியும் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ள தேர்வை 08.04.2024 ஆம் தேதியும் பள்ளி அளவிலேயே வினாத்தாள்களை தயார் செய்து 

பொதுத் தேர்வுகளை நடத்தி முடிக்குமாறு அன்புடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

வாழ்த்துக்களுடன்...

கே. ஆர். நந்தகுமார். மாநில பொதுச் செயலாளர் ...மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள்.