மோடியா Vs எடப்பாடியா.? என்கிற நிலை தான் உள்ளதாக முன்னாள் அமைச்சர் பேச்சு.....!?

 மோடியா Vs எடப்பாடியா.? என்கிற நிலை தான் உள்ளதாக முன்னாள் அமைச்சர் பேச்சு.....!?

ஒசூரில் நடந்த மொழிப்போர் தியாகிகளுக்கான வீர வணக்க நாள் பொதுக்கூட்டம்: மோடியா Vs எடப்பாடியா.? என்கிற நிலை தான் உள்ளதாக முன்னாள் அமைச்சர் பேச்சு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, பாகலூர் அவுசிங்போர்டு பகுதியில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

மாணவரணி மாவட்ட செயலாளர் வெற்றிச்செல்வன் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாணவரணி துணை செயலாளர் அருண் வரவேற்று பேசினார்..

 முன்னிலை மாவட்ட துணை செயலாளர் மதன்  ஓசூர்  பகுதி  மாமன்ற உறுப்பினர் மஞ்சு, ஓசூர் மாநகராட்சியின் நகரமைப்பு குழு தலைவர் அசோகா ரெட்டி, ராஜி, வாசுதேவன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீஷ், ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சென்னை கிருஷ்ணன், ஒன்றியக் கழக செயலாளர்கள் ஹரிஸ் ரெட்டி,ரவிக்குமார், ஜெயபால்,ஓசூர் ஒன்றிய குழு தலைவர் சசி வெங்கட் சாமி,   ஆகியோர் முன்னில வகித்தனர்,

மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணாரெட்டி, கழக பேச்சாளர் திருமதி.சாந்தி, முன்னாள் எம்எல்ஏ சீவி ராஜேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி அவர்கள் பேசுகையில்:

2.20 கோடி குடும்ப அட்டை தாரர்களில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைதொகை எனக்கூறி ஆட்சிக்கு வந்த திமுக, இதனை அமல்படுத்தாமல் வரியை உயர்த்தி மாதந்தோறும் நம்மிடம் பணத்தை வசூலித்தவர்கள், நாடாளுமன்ற தேர்தல் வருவதற்காக 30 மாதங்கள் கழித்து 1000 ரூபாய் கொடுக்கும் திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள், அதிலும் 1 கோடி குடும்ப அட்டைகளுக்கு என தகுதியை தீர்மானித்து ஏமாற்றுகிறார்கள் எனவே திமுக என்னும் ஏமாற்று கட்சிக்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்

2014 நாடாளுமன்ற தேர்தலில் மோடியா..! லேடியா..! என அம்மா அவர்கள் விடுத்த சவால் அடிப்படையிலேயே தற்போதைய 2024 நாடாளுமன்ற தேர்தலும் மோடியா Vs எடப்பாடியா என்றே தேர்தல் போட்டி இருக்கும் என நல்லாட்சி வழங்கிய எடப்பாடி அவர்களின் தலைமையிலான அதிமுகவிற்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய கட்சி தொண்டர்கள் கடுமையாக உழைத்து அதிமுக 39 தொகுதிகளையும் கைப்பற்றி மீண்டும் சாதித்தது என்பதை உலகிற்கு காட்ட வேண்டும் என பேசினார்

இறுதியாக தேர்ப்படை ஆதி நன்றி கூறினார்

 நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன், ஓசூர் ஒன்றிய குழு உறுப்பினர் முரளி,இலக்கிய அணி மாவட்ட செயலாளர் இளஞ்சூரியன், வட்டக் கழக செயலாளர்கள் ஹேமகுமார், ஹரி, குபேரன் என்கின்ற சங்கர், சீனிவாஸ், ஓசூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் நந்தகுமார், அரபு ஜான்,ரகுமான், மாவட்ட பிரதிநிதி அச்சு என்கின்ற லட்சுமணன்,, ஒன்றிய துணைச் செயலாளர் நவீன்,

ராஜா,சந்திரன்,கார்த்தி, மணி, புனித்,முபாரக்,சாமிநாதன்,மாதையன், ஆகியோர் கலந்து கொண்டனர்,.

Hosur Reporter. E. V. Palaniyappan