*ஓசூரில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி ஓய்வூதியதாரர்கள் உண்ணாவிரத போராட்டம்.*
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சென்னை EPF பென்சனர் நலச்சங்கம், ஓசூர் கிளை, சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டு,
குறைந்தபட்ச பென்சனாக மாதம் ரூ.9000/- பஞ்சப்படியுடன் வழங்கிடுக!
EPS-95 பென்சனர்களுக்கு ESI மருத்துவ திட்டத்தை அமுல்படுத்து,
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தகுதியுள்ள அனைவருக்கும் உயர்பென்சன் வழங்கிடு! 2014க்கு முன், பின் என பிரிக்காமல் வழங்கிடு,
மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டுவந்த இரயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்கிடு என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினார்கள்.
இதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் உமா காந்தன் கூறும் பொழுது,
தற்பொழுது முதல் கட்டமாக உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகிறோம் தொடர்ந்து ஒவ்வொரு போராட்டமாக மேற்கொண்டு மத்திய அரசு எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை போராட்டங்கள் தொடரும் என்று அவர் எச்சரித்தார்.