ஓசூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் நடைபெற்ற ஹாஸ்பிடல் டெவலப்மெண்ட் கமிட்டி மீட்டிங்

  ஓசூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் நடைபெற்ற ஹாஸ்பிடல் டெவலப்மெண்ட் கமிட்டி மீட்டிங்

ஓசூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் நடைபெற்ற ஹாஸ்பிடல் டெவலப்மெண்ட் கமிட்டி மீட்டிங் (HDC meeting)நிகழ்ச்சியில் இஎஸ்ஐ மருத்துவமனை உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் மருத்துவ உபகரணங்களை பெற்று தருவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் கீதா தலைமையில் நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர்டாக்டர் ஏ செல்லக்குமார் எம்பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த மருத்துவமனையை ஆய்வு செய்த போது உள்நோயாளிகளுக்கான 50 படுக்கையிலிருந்து 100 படுக்கைகளாக உயர்த்த வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை ஏற்று, மத்திய அமைச்சரிடமும் அப்போதைய டெல்லி அதிகாரிகளுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதையும், நாடாளுமன்றத்திலே ஓசூர் இஎஸ்ஐ மருத்துவமனை சம்பந்தப்பட்ட விவாதங்களில் எடுத்துரைத்ததையும் நினைவு கூர்ந்தார்..அப்போது இருந்த உள்கட்டமைப்பு உயர்த்த முடியாததன் காரணம் உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததையும் அதை அதிகப்படுத்திய பிறகு  தேவை இருப்பின் 50 படுக்கையில் இருந்து  100 படுக்கையாக உயர்த்தி தரப்படும் என்று அமைச்சர்  கூறியிருந்த வாக்குறுதியும் நினைவுபடுத்தினார்.

தற்போது இன்றைய ஆய்வின் பொழுது 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் புறநோயாளிகள்

வந்திருந்ததையும்,100  உள் நோயாளிகள் இருந்த தகவலை சேகரித்துக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், பணியாற்றும் மருத்துவர்களின் சேவையை வெகுவாக பாராட்டினார்.தற்போது இந்த மருத்துவமனை மேம்படுத்த வேண்டிய சூழ்நிலையை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி கண்டிப்பாக 100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தவும், மருத்துவமனையின் உள் கட்டமைப்பை மேம்படுத்தவும்,சிகிச்சைகள் மேற்கொள்ள மருத்துவ உபகரணங்களை பெற்றுத் தருவதற்கான அனுமதியையும் டெல்லியில் அதிகாரிகளிடம் மற்றும் அமைச்சரிடம் பேசுவதாகவும் உறுதி கூறினார்.          மருத்துவமனையில்    அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள தேவையான உபகரணங்களை பெற்று தருவதற்கான  நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதிபட தெரிவித்தார்.

B. S. Prakash