கொத்து கொத்தாக காய்த்திருந்த பலா மரங்கள் வெட்டி அகற்றம்... தினமும் யானைகள் படையெடுத்ததால் விரக்தியில் முடிவு.. !?

 தேன்கனிக்கோட்டை அருகே

கொத்து கொத்தாக காய்த்திருந்த பலா மரங்கள் வெட்டி அகற்றம்... தினமும் யானைகள் படையெடுத்ததால் விரக்தியில் முடிவு.. !?

தேன்கனிக்கோட்டைஅருகே பலா மரங்களை தேடி வரும் யானைகள்கூட்டம், வழியெங்கிலும் உள்ள காய்கறி தோட்டங்களை அழித்து நாசம் செய்தன. இதையடுத்து வேறு வழி யின்றி 5 பலா மரங்களை, விவசாயி முழுவதுமாக வெட்டி வீழ்த்தினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மணியம்பாடி கிராமத்தில் விவசாயி வெங்கடேஷ் என்பவர் தோட்டத்தில் 5க்கும் மேற்பட்ட பலா மரங்கள் இருந்தன. இந்த மரங்களில் தற்போது பலாப்பழங்கள் கொத்து கொத்தாய் காய்த்திருந்தது. இந்த கிராமத்தை ஒட்டியுள்ள ஆலள்ளி காட்டில் இருந்து, இரவு நேரங்களில் யானைகள் வெளியே வந்து, வெங்கடேஷ் தோட்டத்தில் புகுந்து பலா பழம் மற்றும் காய்களை தின்று சென்றன.பலாப்பழங்களை ருசி கண்ட யானைகள், தினமும் அப்பகுதிக்கு படையெடுக்கத் துவங்கின.

அவ்வாறு வரும் யானைகள், அருகில் உள்ள தோட்டங்களில் சாகுபடி செய்துள்ள ராகி, தக்காளி, முட்டைகோஸ், கேரட், பீன்ஸ் உள்ளிட்ட் பயிர்களை நாசம் செய்து சென்றதால், விவசாயிகள் அனைவரும் வேதனையடைந்தனர். இதையடுத்து, அப்பகுதி விவசாயிகள் வெங்கடேஷிடம் பேசினர். உன் தோட்டத்தில் நிற்கும் பலா மரங்களால்தான் யானைகள் கூட்டம் கூட்ட மாகஇங்கு வந்து செல்கிறது. எனவே, பலா மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என கேட்டுக் கொண்ட னர். 

விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படுவதால், தனது நிலத்தில் உள்ள பலா மரங்களை வெட்ட வெங்கடேஷ் முடிவு செய்தார். அதன் படி, தோட்டத்தில் இருந்த 5 பலா மரங்கள் முற்றிலு மாக வெட்டி அகற்றப்பட் டது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், 'யானைகளுக்கு பிடித்த மான உணவுகளில் பலாவும் ஒன்றாகும்.