திமுக தலைவர் உண்மையை மறைத்து பேசிக் கொண்டிருக்கிறார்-ஓசூரில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே பி முனுசாமி கருத்து.

திமுக தலைவர் உண்மையை மறைத்து பேசிக் கொண்டிருக்கிறார்-ஓசூரில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே பி முனுசாமி கருத்து.

ஏற்கனவே தனது தந்தையின் மீது உள்ள பழிச்சொல்லில் தானும் விழுந்து விடக்கூடாது என்பதற்காக ஒரு உண்மையை மறைத்து பேசிக் கொண்டிருக்கிறார்-ஓசூரில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே பி முனுசாமி கருத்து.

இம்மாதம் 20ஆம் தேதி மதுரையில் அதிமுக சார்பில் மாநாடு நடைபெறுவதை ஒட்டி அக்கட்சியினர் பல்வேறு ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட வாரியாக இதற்கான முன்னேற்பாடு தீவிரமடைந்துள்ள நிலையில், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் வெற்றி ஜோதி தொடர் ஓட்டத்தை கழகத் துணைப் பொதுச் செயலாளர் கே பி முனுசாமி தலைமையில் நடைப்பெற்றது.

இதனை கழக துணை பொதுச்செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான கேபி முனுசாமி,அதிமுகவின் மாநிலங்களை உறுப்பினர் தம்பிதுரை,  தர்மபுரி மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர்  கேபி அன்பழகன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர் 

இந்த நிகழ்ச்சியில்  ஏற்பாடுகளை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினருமான அசோக்குமார் செய்திருந்தனர்,

இன்று ஓசூரில் இருந்து துவங்கிய இந்த ஜோதி ஓட்டமானது  இருபதாம் தேதி துவங்கப்பட உள்ள மதுரை மாநாட்டில் கழகபொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது 

இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே பி முனுசாமி தெரிவிக்கையில் 

ஒரு நாகரிகமான பண்பட்ட அரசியல் தலைவராக இருந்தால் நடந்த உண்மைகளை மறக்காமல் சொல்லுகின்ற பக்குவம் அந்த தலைவருக்கு இருக்கும். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அந்த பண்பட்ட மனநிலை இல்லாத காரணத்தினால் ஒரு காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நடந்த உண்மை சம்பவங்களையே மாற்றி கூறிக் கொண்டிருக்கிறார். அந்த உண்மை சம்பவம் நடப்பதற்கு காரண கர்த்தாவே அவரது தந்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. எனவே ஏற்கனவே தனது தந்தையின் மீது உள்ள பழிச்சொல்லில் தானும் விழுந்து விடக்கூடாது என்பதற்காக ஒரு உண்மையை மறைத்து பேசிக் கொண்டிருக்கிறார்.... என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மாநில அமைச்சர் மாநிலங்களவை உறுப்பினர், கழக கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை, தர்மபுரி மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர்  சட்டமன்ற   உறுப்பினருமான கே பி அன்பழகன், ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வம், கிருஷ்ணகிரி தொகுதி  பொதுக்குழு உறுப்பினர்  கே பி எம், சதீஷ்குமார், பாசறை மாவட்ட செயலாளர் ராமு,கூட்டுறவு சங்க தலைவர் ஊராட்சி மன்ற தலைவருமான ராஜு,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒன்றிய கழக செயலாளர் சி வி ராஜேந்திரன்,

காவேரிப்பட்டணம் ஒன்றுக்கு ஒன்றிய குழு தலைவர் பையூர் ரவி, ஓசூர் மாமன்ற மண்டல குழு தலைவர் ஜெய் பிரகாஷ்,

ஓசூர் பகுதி கழக செயலாளர்கள் அசோகா ரெட்டி, ராஜு,மஞ்சு, ஒன்றிய கழக  செயலாளர்கள் ரவிக்குமார்,ஹரிஷ் ரெட்டி,சைலேஷ் கிருஷ்ணன்,பாபு வெங்கடாசலம், பாலசுப்பிரமணியம், ஜாகிர் உசேன், முருகன்,ராமமூர்த்தி,ஓசூர் ஒன்றிய குழு தலைவர் சசி வெங்கடசாமி, கிருஷ்ணகிரி நகர கழக செயலாளர் கேசவன், ஓசூர் முன்னாள் நகர செயலாளர் ஓசூர் மாமன்ற உறுப்பினருமான நாராயணன், அத்திமுகம் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்,தேன்கனிக்கோட்டை ஒன்றிய குழு உறுப்பினர் பழனி ,

சார்பு அணி மாவட்ட கழக செயலாளர்கள் சிட்டி ஜெகதீஷ், தங்கமுத்து,ரவிச்சந்திரன்,சீனிவாசன், மாதேஷ்,மாதையன்,ராஜசேகர்,வேலன், சென்ன கிருஷ்ணன்,இளஞ்சூரியன், வெற்றிச்செல்வம்,  தென்னரசு, 

 கெலமங்கலம் பேரூராட்சி செயலாளர் மஞ்சு,கெலமங்கலம் பேரூராட்சி தலைவர் தேவராஜ்,ஓசூர் ஒன்றிய குழு உறுப்பினர் முரளி, வட்டக் கழக செயலாளர் குபேரன் என்கின்ற சங்கர், ஹேம குமார், சிவக்குமார், சிவராமன்,சீனிவாஸ், ஆனந்த்பாபு, கோபால ராமச்சந்திரன்,

 கழக நிர்வாகிகள்  மாதையன் சந்தோஷ் பிரகாஷ் அச்சு என்கின்ற லட்சுமணன், சுவாமிநாதன், முபாரக், சந்துரு, கிருஷ்ணகிரி மேற்கு கிழக்கு மாவட்ட கழக ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மாமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்,.