கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட விவகாரம் : விவசாயியை வெட்டி கொலை செய்த வழக்கில் நண்பருக்கு ஆயுள் தண்டனை, ஓசூர் நீதிமன்றம் தீர்ப்பு*

 *கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட விவகாரம் : விவசாயியை வெட்டி கொலை செய்த வழக்கில் நண்பருக்கு ஆயுள் தண்டனை, ஓசூர் நீதிமன்றம் தீர்ப்பு*

ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள முத்துராயன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சின்ன பையன் (30)  இவரது நண்பர் அதே கிராமத்தைச் சேர்ந்த முனிராஜ் (36) இவர் விவசாய தொழில் மற்றும் பால் வியாபாரம் செய்து வந்தார்.

விவசாயி சின்ன பையன் விவசாய செலவுகளுக்காக தனது நண்பரான முனிராஜிடம் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும், 4 சவரன் தங்க நகைகளையும் கடனாக வாங்கியுள்ளார். இந்த பணம் மற்றும் நகைகளை நீண்ட நாட்களுக்குப்பின் முனிராஜ், சின்ன பையனிடம் திரும்ப கேட்டுள்ளார். ஆனால் சின்ன பையனால் அதனை திரும்ப கொடுக்க முடியாத நிலை இருந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற சின்ன பையனை, டாட்டா சுமோ காரில் சென்ற முனிராஜ் இடித்து தள்ளி விட்டு அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முனிராஜை கைது செய்தனர். இந்த கொலை வழக்கு சம்பந்தமான விசாரணை ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில் இன்று நீதிபதி ரோஸ்லின் துரை இந்த வழக்கில் தீர்ப்பளித்தார். தீர்ப்பில் விவசாயி சின்ன பையனை கொலை செய்த குற்றத்திற்காக முனிராஜிக்கு ஆயுள் தண்டனையும் 2 ஆயிரமும் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதனையடுத்து போலீசார் முனிராஜை வேலூர் மத்திய சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.