அமித்ஷா கூறியது போல நடைபயணம் தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் . - ஓசூரில் தம்பிதுரை பேட்டி.

 அமித்ஷா கூறியது போல நடைபயணம்  தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் . - ஓசூரில் தம்பிதுரை பேட்டி.

அமித்ஷா கூறியது போல நடைபயணம் என்பது தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றால் அது மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. - ஓசூரில் தம்பிதுரை பேட்டி.

அமித்ஷா கூறியது போல நடைபயணம் என்பது தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றால் அது மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. - ஓசூரில் தம்பிதுரை பேட்டி.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது ஆகஸ்ட் மாதம் இருபதாம் தேதி மதுரையில் அதிமுக சார்பில் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது அடுத்து மாநாட்டில் பங்கேற்று பணியாற்றுவது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான பி பாலகிருஷ்ணா ரெட்டி தலைமையில் நடைபெற்ற

 வரவேற்புரை ஓசூர் பகுதி கழக செயலாளர் வாசுதேவன்,

 இறுதியாக நன்றியுரை பாசறை மாவட்ட செயலாளர் ராம ஆற்றினார்,

இந்த கூட்டத்தில் அதிமுக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் மு தம்பிதுரை கலந்துகொண்டு அதிமுக தொண்டர்களிடையே பேசி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார் 

கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, 

கடந்த காலங்களில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் மதுரையில் மாநாடு நடத்தி தமிழகத்தில் எப்படி திருப்புமுனையை உருவாக்கினார்களோ, அதே போல நடைபெற உள்ள மதுரை மாநாட்டிலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக தமிழ்நாட்டில் மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும். 

நடைபயணம் என்பது ஒவ்வொரு கட்சியும் அவர்களின் வளர்ச்சிக்காக நடத்தப்படுவது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்ட பொழுது அதில் திமுக ஏன் பங்கேற்கவில்லை.? காங்கிரஸ் கட்சி மேற்கொள்ளும் நடை பயணத்தில் அவர்கள் கட்சி வளர்ச்சிக்காக நடத்தப்பட்டதால், கூட்டணி கட்சியாக இருந்த போதிலும் திமுக அதில் பங்கேற்கவில்லை. அதேபோல பிஜேபியும் அவர்களது கட்சியை வளர்ப்பதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்கள் குறித்து மக்களிடையே விளக்குவதற்காகவும் இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுவதாக அந்த கட்சியினுடைய மாநில தலைவர் அண்ணாமலை தெளிவாக தெரிவித்திருக்கிறார். 

நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடை பயணத்தை துவக்கி வைத்து பேசும் பொழுது இந்த நடை பயணம் இத்துடன் நின்று விடாது, வரும் காலகட்டங்களில் தமிழகத்தில் மிகவும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். தமிழகத்தைப் பொறுத்த வரைக்கும் மாற்றம் என்றால் ஒன்று திமுகவிற்கு வாக்களிப்பார்கள் இல்லை என்றால் அதிமுகவிற்கு வாக்களிப்பார்கள். தமிழ்நாட்டில் 1964ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா திராவிட இயக்கத்தை அரியணையில் ஏற்றினார்களோ அன்று முதல் இன்று வரை திராவிட இயக்கம்தான் தமிழ்நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.

கூட்டணி என்பது தேர்தல் சமயத்தில் மாற்றத்தை ஏற்படுவதற்காக மட்டுமே அமைக்கப்படுவது. ஆனால் கொள்கை அடிப்படையில் கூட்டணி என்பது கிடையாது. அதிமுக கொள்கைகளை பிஜேபி ஏற்றுக்கொள்ள முடியாது போல பிஜேபி கொள்கைகளையும் அதிமுக ஏற்றுக் கொள்ள முடியாது. கொள்கை அடிப்படையில் கூட்டணி என்பது எப்போதும் இருந்ததில்லை. இரண்டு கட்சிகளும் கொள்கை ரீதியாக ஒன்றுபட்டு செயல்படுவதற்கு மாறாக மக்களின் நலன் கருத்தில் கொண்டு ஆட்சியாளர்கள் செய்யும் தவறை மக்களிடையே எடுத்துச் சொல்லி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஏற்படுத்தப்படுவது கூட்டணி. 

குறிப்பாக நேற்று மத்திய அமைச்சர் அமித்ஷா பேசும்பொழுது எம்ஜிஆர் ஜெயலலிதாவால் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை தமிழ்நாட்டில் மீண்டும் செயல்படுத்துவதற்காகவே இந்த கூட்டணியும் இந்த நடைபயணமும் என்று கூறியிருக்கிறார். அவர் அதிமுகவினுடைய வலிமையை பற்றி தான் பேசியிருக்கிறார். அதிமுகவால் மட்டுமே மீண்டும் எம்ஜிஆர் ஜெயலலிதா செயல்படுத்திய திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்த முடியும். தமிழ்நாட்டில் 30 ஆண்டுகாலம் நல்லாட்சி செய்தது அதிமுக. அமித்ஷா கூறியது போல நடை பயணம் என்பது தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றால் அது மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. 

பிஜேபியின் கொள்கைகள் அனைத்தையும் எப்படி அதிமுக ஏற்றுக் கொள்ளாதோ அதேபோல அதிமுகவின் அனைத்து கொள்கைகளையும் பிஜேபியும் ஏற்றுக் கொள்ளாது. காரணமாக பொது சிவில் சட்டத்திற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. 

மத்தியிலே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து ஒரு ஆட்சியை கவிழ்த்தது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக மட்டும் தான். மற்ற அனைத்து காலங்களிலும் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியே சந்தித்து இருக்கிறது. மேலும் இது போன்ற நம்பிக்கை இல்லா தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு தொடர்ந்து பாராளுமன்ற அவைகள் முடக்கி பொதுமக்களின் வரிப்பணங்கள் வீணடிக்கப்படுவதற்கு திமுக கூட்டணியை காரணம். தமிழ்நாட்டில் மட்டும் சட்டப்பேரவை நடத்தும் பொழுது மக்கள் பிரச்சனையை பேசுவதாக கூறி திமுகவினர் அதிமுகவினரை வெளியேற்றிவிட்டு சட்டப்பேரவையை நடத்துகின்றனர். பாராளுமன்றத்தில் மட்டும் இதுபோன்று அவை முடக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்குக் காரணம் திமுக செய்துள்ள 2 ஜி ஊழல் மற்றும் பல்வேறு ஊழல்கள் குறித்து எங்கு பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு விடுமோ என்ற பயத்தில் திசை திருப்புவதற்காகவே இதுபோன்று அவை முடக்க நடவடிக்கைகளை திமுக கூட்டணி கட்சியினர் மேற்கொண்டு உள்ளனர். 

திமுகவின் ஊழல் குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு திமுகவின் ஆ ராசா அருவருக்கத்தக்கவாறு பேசியிருக்கிறார். நேற்று மத்திய அமைச்சர் அனிஷா திமுகவின் ஊழல் குறித்து பேசி இருக்கிறார். திமுகவிற்கு தைரியமும் திராணியும் இருந்தால் இதற்கு பதில் அளித்து பேசட்டும்.

அதேபோல மணிப்பூரில் பெண்களுக்கான அநீதியைக்கு ஏற்கனவே அதிமுக கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஆனால் திமுக சார்பில் கனிமொழியை களம் இறக்கி ஏதோ மகள் இருக்கு இவர்கள்தான் பாதுகாப்பு என்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்குகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் முற்றிலும் பெண்களுக்கான உரிமைகள் பறிக்கப்பட்டதுடன் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இதனை திசை திருப்பவே கனிமொழி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் சென்று மணிப்பூருக்கு பயணம் மேற்கொண்டிருப்பது என்பது ஒரு கண்துடைப்பு மட்டுமே. 

ஆகவே நரேந்திர மோடி இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் மிகப் பெரிய தலைவராக உருவெடுத்து வருகிறார் நிச்சயம் மக்களின் நம்பிக்கையை அதிகம் பெற்று செல்வாக்கு மிக்க தலைவராக இருக்கிறார் எனவே வரும் பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவதற்கு அதிமுக எப்பொழுதும் துணை நிற்கும். தமிழ்நாட்டில் பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.... என அவர் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் பெருமாள், மாவட்டத் துணைச் செயலாளர் மதன்,மாவட்ட பொருளாளர் கந்தன், ஒன்றிய கழக  சார்பணி மாவட்ட செயலாளர், ரவிச்சந்திரன், வெற்றிச்செல்வன், சிட்டி ஜெகதீஷ்,ராமு,சீனிவாசன், சென்னா   கிருஷ்ணன், மாதையன்,ஓசூர் மாநகராட்சி மண்டல குழு தலைவர் ஜெய் பிரகாஷ், ஓசூர் முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் முரளி,நாராயண ரெட்டி,ஓசூர் பகுதி கழக செயலாளர்கள் அசோக ரெட்டி, மஞ்சு,ராஜு, ஒன்றிய கழக செயலாளர்கள் ஹரிஷ் ரெட்டி  ஜெயபால், ரவிக்குமார்,

 ஓசூர் ஒன்றிய குழு தலைவர் சசி வெங்கடசாமி, ஓசூர் மாமன்ற உறுப்பினர்கள் குபேரன் என்கின்ற சங்கர், லட்சுமி எமக்குமார், ரஜினி,தில்ஷத் ரகுமான்,சிவராம், மாவட்ட துணை செயலாளர் அலமேலு, ஓசூர் ஒன்றிய குழு உறுப்பினர் முரளி,

ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராம்ராஜ்,தகவல் தொழில்நுட்ப மாவட்ட இணை செயலாளர் விஜயா ஆலயம், மற்றும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் வட்டக் கழக செயலாளர் கிளை கழக செயலாளர் மகளிர் அணி நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் என கலந்து கொண்டனர்,.

E. V. Palaniyappan. Hosur Reporter