சூளகிரியில் 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பணிகளுக்கு அதிமுக கழக துணை பொதுசெயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி அவர்கள் அடிக்கல்

சூளகிரியில் 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பணிகளுக்கு அதிமுக கழக துணை பொதுசெயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி அவர்கள் அடிக்கல்

 கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பணிகளுக்கு அதிமுக கழக துணை பொதுசெயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்..

வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினரின் மேம்பாட்டு நிதியின் கீழ் 23லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மயானத்திற்கு சுற்றுசுவர் அமைத்தல், தகனமேடை,ஆழ்துளை கிணறு, சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன..

சூளகிரி பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று மயானத்திற்கான வசதிகளை வசதிகளை செய்துக்கொடுத்த கழக துணை பொதுசெயலாளர் கே.பி.முனுசாமி அவர்களுக்கு சூளகிரி ஊராட்சி மக்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்

 உடன் சூளகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்ரமணியம், சூளகிரி ஊராட்சி மன்ற தலைவர் மாவட்ட துணை செயலாளர் கலைச்செல்வி ராமன், வர்த்தக அணி   மாவட்ட இணை செயலாளர் சீனிவாசன், சூளகிரி மேற்கு ஒன்றிய  செயலாளர் பாபு வெங்கடாஜலம், வேப்பனஹள்ளி  ஒன்றிய செயலாளர் சைலேஷ் கிருஷ்ணன், சூளகிரி ஒன்றிய குழு உறுப்பினர் சங்கீதா ரமேஷ்,விவசாயம் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் மாதேஷ்,ஊராட்சி மன்றத் தலைவர்கள் செல்வம்,மல்லையா, சுரேஷ், சூளகிரி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வார்டு  உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் குமார்,லோகேஷ், கேசவ செட்டி மணி, உள்ளிட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் என  கலந்து கொண்டனர்.

Hosur Reporter. E. V. Palaniyappan