தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் சார்பாக தீர்மானம்

 தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் சார்பாக தீர்மானம்


இந்த உலகத்தின் முதல் உழைப்பாளிகளாக இருந்து உலகத்திற்கே சோறு போட்டு வாழ வைக்கும்

அனைத்து விவசாயிகளுக்கும் தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் சார்பாக  உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்

உழைப்பாளர் தினமான மே தினத்தில் இன்று 01.05.2023 மாலை 8:30 மணிக்கு தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் ஆலோசனை பொதுக்கூட்டம் சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சங்கத்தின்   உறுப்பினர்கள் கலந்து கொண்டு மேலும் இந்த  ஆலோசனை கூட்டத்தில் மாநில      பொதுச்செயலாளர் G.முருகன்  மாநில பொருளாளர் G. சதீஷ் மாநில சிறப்பு தலைவர் R.துரைசாமி மாநில கௌரவ தலைவர்  K.விஜயகுமார் மாநில ஆலோசகர் பம்பை ராஜேந்திரன் மாநில பேச்சாளர் S. சௌந்தரராஜன் அவர்கள் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டையைச் சேர்ந்த திரு பழனி s/o கோபால் என்பவர் மாநில அமைப்பு தலைவராகவும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கிளாப்பாளையத்தை சேர்ந்த திரு சோழபாண்டியன் s/o அம்மாசி அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது