19ஆம் தேதி காலை 10 மணிக்கு 10, 11 தேர்வு முடிவுகள்

 19ஆம் தேதி காலை 10 மணிக்கு 10, 11 தேர்வு முடிவுகள்

பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடவும் தேர்வுத்துறை தயாராக உள்ளது.

10-ம் வகுப்பு தேர்வு முடிவு 17-ந்தேதியும், 11-ம் வகுப்பு தேர்வு முடிவு 19-ந்தேதியும் வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கபட்டு இருந்தது.

இந்த நிலையில் 10, 11-ம் வகுப்பு தேர்வு முடிவை ஒரேநாளில் வெளியிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகளுக்கு உடனடி தேர்வு ஜூன் 19-ந்தேதி நடத்தப்படும் என்றும் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர் கல்வி பெற உயர் கல்வி வழிகாட்டி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தாங்கள் படித்த பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு இக்குழு ஆலோசனை வழங்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

*தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 19ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும்.*

*11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 19ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும்.*

*தேர்வு முடிவுகளை கீழ்காணும் இணையத்தில் பார்க்கலாம்.*

*www.tnresults.nic.in*

*www.dge.tn.gov.in*