கிரஷர் உரிமையாளர் கொலை வழக்கில் இரண்டு பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை : ஓசூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஓசூர் அருகே உள்ள காருகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ் (60) இவர் உப்பரதம்மன்றப்பள்ளி கிராமத்தில் கிரஷர் நடத்தி வந்தார். முனிராஜ்க்கும் உப்பரதம்மன்றப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பசபீரப்பா என்பவருக்கும் நிலத்தகறாரு இருந்து வந்துள்ளது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த பசபீரப்பா மகன் சீனிவாசன் (39) மற்றும் அவரது நண்பர் நாகராஜ் (37) ஆகியோர் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் தேதி கிரஷர் உரிமையாளர் முனிராஜை வெட்டி கொலை செய்தனர்.
இந்த கொலை குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சீனிவாசன் மற்றும் நாகராஜ் ஆகிய இருவரை கைது செய்தனர். இந்த கொலை வழக்கு ஓசூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று இந்த கொலை வழக்கில் நீதிபதி ரோஸ்லின் துரை தீர்ப்பு வழங்கினார். கொலையாளிகள் சீனிவாசன் மற்றும் நகராஜ் ஆகியோருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார். இதனையடுத்து குற்றவாளிகள் இருவரையும் போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.
B. S. Prakash