புதிய சுகாதார நிலையம் அமைக்க தளி சேர்மன் கோரிக்கை

 புதிய சுகாதார நிலையம்  அமைக்க  தளி சேர்மன் கோரிக்கை...

தளி ஊராட்சி ஒன்றியத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் - 7 மற்றும் அரசு துணை சுகாதார நிலையங்கள் - 36 எண்ணிக்கையில் தான் உள்ளன. இங்குள்ள பொதுமக்கள் மருத்துவமனைக்கு வெகு தூரம் செல்ல வேண்டியுள்ளது.  மேலும், இங்குள்ள மக்கள் பெரும்பாலானோர் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ளவர்கள்.  தனியார் மருத்துவமனைக்கு செல்லும் நிலையில் இல்லை. எனவே, பொதுமக்களின் அவசர அவசியத்தை முன்னிட்டும், மக்களின் பொதுநலனை கருத்தில் கொண்டும், கீழ்காணும் விவரப்படி புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம், புதிய அரசு துணை சுகாதார நிலையம் மற்றும் ஏற்கனவே உள்ள சுகாதார நிலைய கட்டிடங்களின் பழுதுபார்த்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்குமாறு இன்று (04.01.2023) நடைபெற்ற “மாவட்ட சுகாதார பேரவை“ கூட்டத்தில் சுகாதார துறை மேலதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

தளி ஊராட்சி மன்ற குழு தலைவரும் சேர்மன் சீனிவாசலூர் ரெட்டி அவர்கள் சுகாதாரத்துறை இயக்குனர்  அவர்களுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.

B. S. Prakash. Thally Reporter